23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1944767 26
Other News

பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்..?

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ‘பாரத்’ என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். “ஒரு நாட்டின் பெயரை மாற்றுவது பொருளாதார வளர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் எப்படி உதவும்? இது மிகவும் விசித்திரமானது. இந்தியா எப்போதுமே ‘பாரதம்’ தான். நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் நாம் அறிவோம். ஏன்? திடீரென்று இந்தியா என்று அழைப்பதை நிறுத்துவோமா?” கூறினார்.

குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்ணீருடன் விஷால் –நான் அப்படி பண்ணி இருக்க கூடாது, என்ன மன்னிச்சிடுங்கண்ணே

nathan

சந்திரன் மிதுன பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும்.

nathan

சனி – யோகம் பெறும் ராசிகள்

nathan

குழந்தையை நீரில் அமுக்கி கொன்றுவிட்டு தாய் தற்கொலை

nathan

‘துருவ நட்சத்திரம்’ டிரைலர்? ரசிகர்களின் ரிவ்யூ இதோ!

nathan

வார நாட்களில் ஐடி வேலை; ஓய்வு நேரங்களில் சமூகப் பணி

nathan

அல்வாவில் மயக்க மருந்து கொடுத்து அந்த படுக்கையறை காட்சி.?

nathan

சனி வக்ர நிவர்த்தி – யோகம் பெரும் ராசிக்காரர்கள்

nathan

பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்..

nathan