28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
p70a
தலைமுடி சிகிச்சை

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி ‘பேக்’

‘மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணி யுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.

இந்த மருதாணி பேஸ்ட்டை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம்.

மருதாணி பவுடர் – கால் கிலோ,
கடுக்காய் பவுடர் 25 கிராம்,
துளசி பவுடர் 25 கிராம்,
நெல்லிக்காய் 50 கிராம்,
டீத்தூள் டிகாஷன் 50 கிராம்,
2 எலுமிச்சம்பழங்களின் சாறு,
யூகலிப்டஸ் ஆயில் 4 துளி,
ஆலீவ் ஆயில் 4 டீஸ்பூன்…

இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள்.
இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மூன்று அல்லது நான்கு மாதம் வரை கெடாது. இந்த ‘பேக்’கை வாரம் ஒரு முறை தலைக்குப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.

மருதாணி இலை 250 கிராம்,
கொட்டை நீக்கிய கடுக்காய் 25 கிராம்,
சுத்தம் செய்யப்பட்ட துளசி இலை 25 கிராம்,
கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் 25 கிராம்…

இவற்றை நன்றாக நசுக்கி கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் யூகலிப்டஸ் ஆயில் 10 துளி, ஆலீவ் ஆயில் 4 டீஸ்பூன், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, டீத்தூள் டீகாஷன் 100 கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இந்த ‘பேக்’ இரண்டு மாதம் வரை கெடாது.’
p70a

Related posts

மென்மையான கூந்தலுக்கு…

nathan

உங்களுக்கு பொடுகு பிரச்சனை போக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

nathan

முடி கொட்டுவது இயல்பானதா?

nathan

உங்க இளநரையை நிரந்தரமாக கருமையாக்க வழிகள் என்ன தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்க முடி அடிக்கடி சிக்கு ஆகுதா? இதோ சில வழிகள்!

nathan

தலைமுடியை அடர்த்தியா நீளமாக வளரச் செய்யும் வல்லாரை கீரை…

nathan

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ்

nathan

வேப்பம்பூ- பொடுகு பிரச்னை தீரும்.

nathan

தலைமுடி பிரச்சனைகளுக்கு இந்த நெல்லிக்காய் மாஸ்க்கை ஒருமுறை ட்ரை பண்ணுங்க…

nathan