தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார்.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் பிரதமர் மோடி இன்று புகைப்படம் எடுத்துக்கொண்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
குழு புகைப்படத்தின் போது, தலைவர்கள் எங்கு நிற்க வேண்டும் என்பதைக் குறிக்க சிறிய தேசியக் கொடிகள் தரையில் வைக்கப்பட்டன. குரூப் போட்டோ எடுக்க மேடை ஏறிச் சென்ற பிரதமர் மோடி, உடனடியாக இந்திய மூவர்ணக் கொடியை உரிய இடத்தில் இருந்து எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
ஏற்கனவே தனது நாட்டுக் கொடியை புறக்கணித்து மிதித்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, மோடியின் செயலைக் கண்டு தனது நாட்டுக் கொடியை கையில் எடுத்தார். அவருக்கு வந்த கொடியை அரங்கில் இருந்த ஒருவர் சென்றார். மோடியின் இந்த நடவடிக்கை இந்திய மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
நிற்கும் நிலையைக் குறிக்க, ஒவ்வொரு தலைவர் இடமும் நாட்டின் கொடியால் குறிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மூவர்ணக் கொடியை மிதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய, உடனடியாக அதை எடுத்து தனது கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். ஆனால், தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா அவர்களது கொடியை மிதித்த… pic.twitter.com/Xp37nu1yhb— Asianetnews Tamil (@AsianetNewsTM) August 23, 2023