22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
recepee
சைவம்

பல கீரை மண்டி

தேவையானவை: முருங்கைக்கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளி கீரை – தலா அரை கப், சின்ன வெங்காயம் – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 3 (அல்லது காரத்துக்கேற்ப), அரிசி கழுவிய நீர் – 4 கப், திக்கான தேங்காய்ப்பால் – ஒரு கப், புளி – சிறிய எலுமிச்சை அளவு, கடுகு – சீரகம், உளுத்தம்பருப்பு, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: கீரைகளை நன்கு கழுவி நறுக்கவும். பாதியளவு அரிசி கழுவிய நீரில் புளியைக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு. கடுகு, சீரகம் உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி. பிறகு, கீரைகளைச் சேர்த்து வதக்கி, மீதமுள்ள அரிசி கழுவிய நீரை சேர்த்து வேகவிடவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் திக்கான தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும்.

இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.recepee

Related posts

கொத்தமல்லி புலாவ்

nathan

சிம்பிளான புடலங்காய் பொரியல்

nathan

குடைமிளகாய், மிளகு, காளான் துவட்டல்

nathan

மஷ்ரூம் புலாவ்

nathan

ஃபிரைடு ரைஸ்

nathan

மஷ்ரூம் பிரியாணி

nathan

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு – Beans Paruppu masiyal Samayal kurippu

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான காரமான காளான் மஞ்சூரியன்

nathan

வேப்பம்பூ சாதம்

nathan