தேவையான பொருட்கள்
ஆட்டிறச்சி – 1/2 கிலோ (வெட்டி நன்கு கழுவவும்)
ஊற வைக்க தேவையான பொருட்கள்
இஞ்சி பூண்டு விழுது அரைத்தது – 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
எலுமிச்சை சாறு – 1 மே.கரண்டி
உப்பு
தனி மிளகாய் தூள் – 1 மே.கரண்டி
மசாலா கலவைக்கு
கராம்பு – 2
கறுவா – 1 பட்டை
சின்ன சீரகம் – 1/2 தே.கரண்டி
மல்லி – 1 மே.கரண்டி
எள்ளு – 1/2 தே.கரண்டி
சிவப்பு காய்ந்த மிளகாய் – 4-5
பெருஞ்சீரகம் – 1/2 தே.கரண்டி
வெங்காயம் – 1
துருவிய தேங்காய் – 1/2 கப்
குழம்புக்கு தேவையான பொருட்கள்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மல்லித்தழை – கையளவு
உப்பு – தேவையான அளவு
உருளைக்கிழங்கு – 1 (அவித்து பிசைந்த்தது)
செய்முறை
ஊற வைக்க தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து வெட்டி கழுவிய ஆட்டிறச்சியில் நன்கு கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் பிரஷர் குக்கரில் ஆட்டிறச்சியியை 3-4 விசில்கள் வரும் வரை (3/4 பங்கு வேகும் வரை) வேக விடவும். தாச்சியில் எண்ணெய் சிறிதளவு விட்டு கறுவா, சின்ன சீரகம், பெருஞ்சீரகம், மல்லி, எள்ளு, காய்ந்த மிளகாய், என்பவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுள் துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். வதக்கிய கலவையினை நன்கு அரைத்து வேறாக வைக்கவும். அதே தாச்சியில் எண்ணெய் சிறிதளவு விட்டு நறுக்கிய வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி பின் அவித்து பிசைந்த உருளைக்கிழங்கினையும், வெட்டியா மல்லி தழை, கருவேப்பிலை, தக்காளி, உப்பு சேர்த்து 1 நிமிடத்துக்கு வதக்கவும். ¾ பங்கு வேகிய ஆட்டிறச்சியினை இதனுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்கு பின்னர் அரைத்து எடுத்து வைத்துள்ள மசாலா கலவையினையும் சேர்த்து நன்கு கிளறி மூடி மெல்லிய தணலில் ஆட்டிறச்சி நன்கு வேகும் வரை விடவும். பிரட்டல் பதத்தில் கறியினை எடுக்கவும். இவ்வகையான ஆட்டிறச்சி கறியினை விருந்தின் போது சமைத்து பரிமாற நன்றாக இருக்கும்.