27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

பார்லர் போறீங்களா?

ld2109டாக்டரிடமும் வக்கீலிடமும் எதையும் மறைக்கக் கூடாது என்கிற மாதிரி, உங்கள் பியூட்டீஷியனிடமும் மறைக்காதீர்கள்!

பார்லர் போவதற்கு முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. ‘கிளையன்ட் கன்சல்ட்டேஷன்’ எனப்படுகிற  வாடிக்கையாளர் ஆலோசனை மிகவும் முக்கியம். உங்கள் பியூட்டீஷியனிடம் பேசித் தெரிந்து கொள்ள வேண்டிய அவற்றைப் பற்றி விளக்கமாகப்  பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

முதலில் அழகுக்கலை நிபுணரிடம் ஆலோசனைக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்குங்கள். உங்களுடைய சருமம், கூந்தல் போன்றவற்றின் தன்மையை  அழகுக்கலை நிபுணரால்தான் சரியாகக் கணிக்க முடியும். சருமத்துக்கான சிகிச்சை எடுக்கப் போகிறீர்கள் என்றால், முதலில் சருமத்துக்கான டெஸ்ட்  முக்கியம். அதற்கென இப்போது பிரத்தியேக கருவிகள் வருகின்றன. உட் லேம்ப் வைத்தது, மாயிச்சரைசர் டிடெக்டர் என அதில் நிறைய வகைகள்  உள்ளன.

இது எதுவுமே இல்லாதபட்சத்தில், சாதாரண டிஷ்யூ பேப்பரை வைத்தாவது உங்கள் சருமத்தின் தன்மையை பியூட்டீஷியன் கண்டுபிடிப்பார். அதே  மாதிரிதான் கூந்தல் பிரச்னைகளைக் கண்டறியும் ஹேர் ஸ்கேனர்… பொடுகு உள்பட உங்கள் கூந்தலில் உள்ள எல்லாப் பிரச்னைகளையும்  இந்த  ஸ்கேனர் காட்டிக் கொடுத்து விடும்.

எதையும் மறைக்காதீர்கள்!

அழகு சிகிச்சைகளும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவைதான். உதாரணத்துக்கு உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி இருந்தால், அதை மறைக்காமல்  சொல்லுங்கள். கர்ப்பமாக இருப்பதைக்கூட சில பெண்கள் மறைக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும்போது, சில வகை சிகிச்சை களை செய்யக்கூடாது.  சாய்ந்த நிலையில் உட்கார வைத்தும், எந்திரங்கள் உபயோகிக்காமலும், கெமிக்கல் அல்லாததுமான சிகிச்சைகளைத்தான் செய்வோம்.

நீரிழிவுக்காரர்கள், பிபி அதிகம் உள்ளவர்கள், நரம்புக்கோளாறு உள்ளவர்கள், வாய்க்குள்ளேயோ, உடலின் வேறு பகுதிகளிலோ (பேஸ் மேக்கர் மாதிரி)  உலோகங்கள் பொருத்தியிருந்தாலும், அதைச் சொல்ல வேண்டும். நரம்புக்கோளாறு உள்ளவர்களுக்கு அரோமா தெரபி செய்யக்கூடாது. நீரிழிவு  உள்ளவர்களுக்கு உலோகங்களைப் பயன்படுத்தக் கூடாது.

பார்லரில் கவனிக்க வேண்டியவை…

முதல் விஷயம் சுத்தமும் சுகாதாரமும். ஃபேஷியல் ஹெட் பேன்ட், முகம் துடைக்கிற டிஷ்யூ, ஃபேஷியல் டிரெஸ், ஸ்பா காலணி என இப்போது  எல்லாமே டிஸ்போசபிள்தான். வாக்சிங் செய்யக்கூட வாக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் எனப்படுகிற டிஸ்போசபிள் பட்டைகளைத் தான் உபயோகிக்கிறார்கள்.  அப்போதுதான் ஒருவரிடமிருந்து இன் னொரு வருக்கு இன்ஃபெக்ஷன் வராமலிருக்கும்.

நீங்கள் செல்கிற பார்லரில் இவற்றையெல்லாம் பின்பற்றுகிறார்களா எனப்பாருங்கள்.

பெடிக்யூர், மெனிக்யூர் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் முறையாக ஸ்டெரிலைஸ் செய்யப்படுகின்றனவா என்றும் பாருங்கள். உங்களுக்கு  உபயோகிக்கிற கருவிகள் அப்படி ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டவையா எனக் கேட்பது உங்கள் உரிமை.

ஒருவருக்கு உபயோகிக்கிற சீப்பு மற்றும் பிரஷ்ஷை முறையாக சுத்தப்படுத்தாமல் அடுத்தவருக்கு உபயோகிக்கக் கூடாது.

பார்லர்களில் உங்களுக்குப் பயன்படுத்துகிற டவல்கள் சுத்தமாக, துவைத்து மடிக்கப்பட்டு, உலர்ந்த நிலையில் உள்ளனவா எனப் பாருங்கள். ஈரத்  துணிகளின் மூலம் கிருமித் தொற்று வேகமாகப் பரவும்.

மரு நீக்கும் காட்டரைசேஷன் சிகிச்சையில் ஒவ்வொரு முறையும் புதிய ஊசியைத்தான் உபயோகிக்க வேண்டும். உபயோகித்த ஊசியைப்  பயன்படுத்துவது மிக ஆபத்தானது. ரேசரும் இப்படித்தான்.

ஃபேஷியல் செய்து முடித்ததும், கடைசியாக சன்ஸ்கிரீன் தடவி அனுப்ப வேண்டும்.

பிளீச் செய்யும்போது, உங்களது தேவை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். சருமத்தில் உள்ள முடியின் நிறத்தை மாற்றாமல், வெறுமனே  சருமத்தை மட்டும் சுத்தப்படுத்தக்கூடிய பிளீச் இப்போது வந்து விட்டது. சரும ரோமங்களின் நிறம் மாறாமலிருக்க வேண்டுமென நினைப்போர் இதைச்  செய்து கொள்ளலாம்.

வாக்ஸ் செய்கிற போது, முதலில் வாக்ஸ் செய்யப்பட வேண்டிய பகுதியை சுத்தப்படுத்தி, பிறகு வாக்ஸ் செய்து, கடைசியாக போஸ்ட் வாக்ஸ்  ஜெல்லோ, கிரீமோ அல்லது மாயிச்சரைசரோ உபயோகிக்கிறார்களா எனப்பாருங்கள்.

ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங்கின் போது…

20 வயதுக்கு முன்னால் ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் போன்ற கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்து கொள்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. அதன் பிறகு  செய்கிறவர்களும், அடிக்கடி செய்வதைத் தவிர்க்க வேண்டும். புதிதாக வளர்கிற முடி, பழையபடிதான் வளரும். அதை மறுபடி டச்சப் செய்ய நினைத்து,  அடிக்கடி இந்த மாதிரி கெமிக்கல் சிகிச்சைகளை செய்வது நல்லதல்ல. ஸ்ட்ரெயிட்டனிங் செய்தே ஆக வேண்டும் என விரும்புவோர், கெரட்டின் கலந்த  சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். இதில் அமோனி யாவோ, கடுமையான கெமிக்கல்களோ கிடையாது என்பதால் கூந்தலுக்குப் பாதுகாப்பானது.  சாதாரண ஸ்ட்ரெயிட்டனிங் சிகிச்சையை விட சில நூறு ரூபாய் அதிகமானது என்றாலும் பாதிப்பில்லாதது.

பெர்மிங் செய்து கொள்ள விரும்புவோருக்கும், அதே போல பாதுகாப்பான, பக்கவிளைவுகள் தராத சிகிச்சைகள் உள்ளன. அழகுக்கலை நிபுணரிடம்  பேசித் தெரிந்து கொண்டு அவற்றைச் செய்து கொள்ளலாம்.

முக்கியமாக இந்த சிகிச்சைகளில் கவனிக்க வேண்டிய விஷயம், சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பு. அந்தந்த சிகிச்சைக்கேற்ற ஷாம்பு, கண்டிஷனர்  உபயோகித்தால்தான் பக்க விளைவுகள் இல்லாமல் கூந்தலைப் பராமரிக்க முடியும். அதையும் அழகுக்கலை நிபுணரிடம் கேட்டுப் பின்பற்ற வேண்டும்.

Related posts

முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட உருளைக்கிழங்கு பேஸ்பேக்…!!

nathan

பிரபலங்களின் அழகு ரகசிய குறிப்புகள்

nathan

சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம் -வெளிவந்த தகவல் !

nathan

தனது வாழ்வின் சோகத்தை பகிர்ந்த ஜனனி.. தடுக்க வந்த விக்ரமன்!

nathan

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா?

nathan

பிறந்தநாளில் கமல்ஹாசனுக்கு தாயாக மாறிய அண்ணி!

nathan

உங்களுக்காகவே முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை நீக்க பல இயற்கை டிப்ஸ்கள் இதோ..!

nathan

உடம்பு சும்மா எப்பவும் தளதளனு வெச்சிக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

கருமையான சருமத்தை வெண்மையாக்க சில அட்டகாசமான வழிகள்!!!

nathan