30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
ld1956
சரும பராமரிப்பு

மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?

நான் கொஞ்சம் கறுப்பு. அதனாலேயே வரன்கள் தள்ளிப் போகின்றன. மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?

தீர்வு சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் லதா மோகன்…

நிறம் பற்றிய கவலை வேண்டவே வேண்டாம். கறுப்பும் அழகுதான் கண்மணி! பார்லரில் க்ரீம் ப்ளீச் சிகிச்சையை மாதம் ஒரு முறை செய்தாலே போதும்… நிறம் மாறும். இப்போது ‘பயோ வேக்ஸ்’ என்ற சிகிச்சையும் உள்ளது. சருமத்தை வேக்ஸிங் மூலம் சரி செய்து நல்ல நிறத்தைப் பெறலாம்.

திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பு ‘ஸ்கின் லைட்னிங் ஃபேஷியல்’ செய்தால் பலன் கிடைக்கும். ப்ளீச் செய்த பிறகு வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு ப்ளீச் செய்தால் தோல் வறண்டு போகும். அவர்கள் இரவு தூங்கப் போவதற்கு முன்பு ‘மாய்ஸ்சரைஸர் க்ரீம்’ தடவிக்கொள்வது நல்லது.

வீட்டிலேயே சில சிகிச்சைகளையும் செய்யலாம். ஒரு ஸ்பூன் தேனில், சில துளிகள் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாகக் கலந்து, அதை முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.ld1956

Related posts

ஜொலிக்கிற சருமம் வேணும்னா சாமந்தி பூ ஃபேஸியல் பேக் ட்ரை பண்ணி பாருங்க!!

nathan

கழுத்தின் பின்புறம், முழங்கால், கணுக்கால் கருமை போகணுமா?

nathan

Beauty tips… சரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்!

nathan

சரும வறட்சியினால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்க சில டிப்ஸ்…

nathan

சரும பொலிவைக் அதிகரிக்க வீட்டிலேயே எப்படி ஸ்க்ரப் தயாரிக்கலாம்?

nathan

குதிகால் வெடிப்பு ரொம்ப வலிக்குதா?இதோ எளிய நிவாரணம்

nathan

தக்காளி ஜுஸ்வுடன் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய்யை போக்க..

nathan

சருமத்தை பொலிவாக்க கடைபிடிக்க வேண்டியவை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

nathan