2 chicken egg poriyal 1670073471
அசைவ வகைகள்

சிக்கன் முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* முட்டை – 2

* எலும்பில்லாத சிக்கன் – 100 கிராம்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சிக்கனை குக்கரில் போட்டு, சிறிது உப்பு தூவி 1-2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு வேக வைத்த சிக்கனை கையால் சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாயை சேர்த்து, சிறிது உப்பு தூவி ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.2 chicken egg poriyal 1670073471

* அடுத்து அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளற வேண்டும்.

* இறுதியாக சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சிக்கன் முட்டை பொரியல் தயார்.

குறிப்பு:

* இந்த ரெசிபியை சிக்கன் 65 துண்டுகளைப் பயன்படுத்தியும் செய்யலாம்.

* சிக்கன் குழம்பில் உள்ள சிக்கனை சாப்பிட பிடிக்காவிட்டால், அவற்றைக் கொண்டும் இந்த ரெசிபியை செய்யலாம்.

Related posts

சுவையான பாலக் சிக்கன்

nathan

செட்டிநாடு எலும்பு குழம்பு

nathan

வஞ்சரம் மீன் குழம்பு

nathan

மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!

nathan

மசாலா மீன் வறுவல்

nathan

கருவாட்டு ப்ரை(Karuvadu Fry)

nathan

மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

செட்டிநாடு சிக்கன் கறி

nathan

ரமலான் ஸ்பெஷல்: பெப்பர் சிக்கன் வறுவல்

nathan