இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதி காலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெயை அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொண்டால் கைவிரல்கள் சதை பிடிப்பற்று அழகாக இருக்கும்.
கை விரல்களை டைப் அடிப்பது போல் அசைக்கவும். இது கைகளுக்கு நல்ல பயிற்சி.
நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிடவும்நகம் வெட்டிய பின்னர் ஸ்கீன் க்ரீம் தடவவும்.
வாரம் ஒரு முறையாவது நகங்களை வெட்டி விடவும்
நகங்களை அதிக நேரம் தண்ணீரில் வைக்காதிங்க. நகத்தில் உள்ள ஈர பசை போய்விடும்.
நகத்தில் வெடிப்பு இருந்தால் நைல் பாலிஷ் போட்டால் மறையும்.
நகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உணவில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.