29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
03 1417595299 12egg
சரும பராமரிப்பு

மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க சில இயற்கை வழிகள்!!!

ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு இடையூறை விளைவிக்கும் வண்ணம் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை முகத்தில் ஏற்பட்டுவிடும். ஒருவேளை பருக்கள் முகத்தில் இல்லாமல் இருந்தாலும், மூக்கின் மேல் மற்றும் அதனைச் சுற்றிய இடங்கள் மட்டும் சொரசொரவென்று லேசாக கருப்பாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள்!!!

கரும்புள்ளி பிரச்சனையானது எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம் இருக்கும். அதிலும் சருமத்துளைகளில் இருந்து வெளிவரும் எண்ணெயானது வெளியேறாமல் அடைக்கப்படும் போது ஏற்படும். சருமத்தின் மென்மையைத் தடுக்கும் கரும்புள்ளி பிரச்சனையை தடுக்க சமையலறையிலேயே நிறைய பொருட்கள் உள்ளன. இங்கு கரும்புள்ளியை நீக்க உதவும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதனை அன்றாடம் செய்து உங்கள் முகத்தை பட்டுப்போன்று மென்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, அதனைக் கொண்டு சொரசொரவென்று உள்ள கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நன்கு தேய்த்து, பின் நீரில் கழுவி, துணியால் அழுத்தி துடைத்தால், கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

தேன்
தேன் கூட கரும்புள்ளிகளைப் போக்க உதவும். அதற்கு தேனை லேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.

பட்டையுடன் தேன்
பட்டையை பொடி செய்து அதனை தேனில் கலந்து, முகத்தில் தடவி தேய்த்து கழுவினால், கரும்புள்ளிகளானது விரைவில் மறையும்.

தக்காளி
தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவி துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் போய்விடும்.

கார்ன் ஸ்டார்ச்
கார்ன் ஸ்டார்ச்சில் தண்ணீர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, பின் தேய்த்து கழுவினால், முகத்தில் உள்ள சொரசொரப்பு நீங்கும்.

ஆவிப்பிடிப்பது
அனைத்தையும் விட ஆவிப்பிடிப்பது தான் மிகவும் சிறப்பான வழி. அதிலும் சுடுநீரில் மூலிகைகளான லாவெண்டர், எலுமிச்சை தோல் மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து, ஆவிப்பிடித்து சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன், கரும்புள்ளிகளும் விரைவில் மறையும்.

பால்
தினமும் 2-3 முறை பாலை பஞ்சில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.

கற்றாழை
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கற்றாழை துண்டு கொண்டு மேல்புறம் நோக்கி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் தண்ணீரை கையில் நனைத்து முகத்தை தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பட்டுப்போன்று இருக்கும்.

03 1417595299 12egg

Related posts

எண்ணெய் சருமத்தினருக்கான சிறந்த நேச்சுரல் டோனர்கள்

nathan

உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றும் இயற்கை பவுடர்

nathan

முக அழகை பராமரிப்பதற்கு தசைகளுக்கு பொலிவு சேர்க்கும் பயிற்சி

nathan

நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

sangika

வயதைச் சொல்லும் கழுத்து

nathan

வயதான தோற்றத்தை மாற்றியமைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

அழகு குறிப்புகள்:மேனியை மெருகூட்ட!

nathan

நிமிடத்தில் சரும பொலிவை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

nathan

முழங்கையில் உள்ள கருமையை நீக்கி மென்மையாக்க சில வழிகள்!!!

nathan