பலாப்பழம், உடலுக்கு பல நன்மைகளைக் கொடுத்தாலும், சருமத்தைப் பராமரிப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. பலாப்பழத்தை சாப்பிடுவதுடன், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் அழகாக ஜொலிக்கும்.
மேலும் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல், இந்த பழத்தை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.
• சிலருக்கு கண்களைச் சுற்றி சுருக்கங்கள் வந்து முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கும். இத்தகைய சுருக்கங்களைப் போக்குவதற்கு பலாப்பழத்தை குளிர்ந்த பால் சேர்த்து அரைத்து, அதனை முகத்திற்கு தடவி 20 கழித் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், சுருக்கங்கள் மறையும். அதிலும் இந்த முறையை நான்கு வாரங்களுக்கு பின்பற்றினால், சுருக்கங்களை முற்றிலும் போக்கிவிடலாம்.
• கோடையில் பலர் முகப்பரு பிரச்சனைக்கு ஆளாகியிருப்பார்கள். அத்தகையவர்கள், இதனைப் போக்குவதற்கு பலாப்பழத்தை அரைத்து, அந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், பருக்கள் முழுவதுமாக நீங்கிவிடும்.
• முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருந்தால், அதனைப் போக்குவதற்கு பலாப்பழ ஃபேஸ் பேக் போட்டால் போக்கிவிடலாம். அதிலும் பலாப்பழத்தை அரைத்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
• பலாப்பழத்தின் விதையை பால் மற்றும் தேன் சேர்த்து அரைத்து, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பட்டுப் போன்று ஜொலிக்கும்.
• பெரும்பாலானோருக்கு உதடுகளைச் சுற்றி கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, பலாப்பழத்தை அரைத்து, உதட்டைச் சுற்றி தடவி, 5 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.