24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
pedicure 29 1480397672
கால்கள் பராமரிப்பு

வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி? : நீங்களும் ட்ரை பண்ணுங்க….!

பெடிக்யூர் செய்யத் தேவையான பொருட்கள்
* நெயில் பாலிஷ் ரிமூவர், காட்டன்
* ஒரு வாளி, வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை, ஷாம்பு, கல் உப்பு
* நெயில் கட்டர், மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார்
* மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெய்

செய்முறை 1
முதலில் கால் விரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை ரிமூவர் கொண்டு நீக்க வேண்டும். அதிலும் அந்த ரிமூவர் ஆல்கஹால் மற்றும் அசிட்டோன் இல்லாததாக இருக்க வேண்டும்.

செய்முறை 2
பின் ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் கல் உப்பு, சிறிது ஷாம்பு மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்நீரில் கால்களை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

செய்முறை 3
பின்பு மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார் கொண்டு பாதங்கள் மென்மையாக தேய்த்து விட வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் விரைவில் வெளியேறிவிடும்.

செய்முறை 4
அடுத்து நெயில் கட்டர் கொண்டு கால் விரலில் உள்ள நகங்களை வெட்டி நீக்கி விட்டு, நகங்களின் முனைகளை தேய்த்து விடுங்கள். இதனால் கால்விரல் நகங்கள் சீராகக் காணப்படும்.

செய்முறை 5
இறுதியில் கால்களை ஒருமுறை நீரில் கழுவி, பின் துணியால் துடைத்து உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயைத் தடவ, பாதங்கள் பொலிவோடும், சுத்தமாகவும், வறட்சியின்றியும் காட்சியளிக்கும்.

குறிப்பு :-
இச்செயலை இரவில் படுக்கும் முன் செய்து, மாய்ஸ்சுரைசர் தடவிய பின் கால்களுக்கு காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டால், பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பு விரைவில் மறைவதைக் காணலாம். மேலும் இச்செயலை வாரம் ஒருமுறை செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.pedicure 29 1480397672

Related posts

மொழு மொழு பாதங்களுக்கு

nathan

குளிர் காலத்தில் பாதங்களை நீங்க எப்படி பராமரிக்க வேண்டும்?

nathan

பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?

nathan

கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்! Tips to Care your feet

nathan

பித்தவெடிப்புக்கு சொல்லலாம் குட் பை!

nathan

மிருதுவான பாதங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்..!!இத படிங்க!

nathan

பனிக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

nathan

பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்

nathan

வழவழப்பான அழகான கால்களுக்கு டிப்ஸ்

nathan