காலையில், மிதமான மாய்ச்சரைசிங் பேஸ் வாஷ் மூலம், முகம் கழுவலாம். குளிர் காலத்தில், நல்ல தரமான மாய்ச்சரைசர்களையே பயன்படுத்த வேண்டும்.
அப்போது தான், சருமம் வறண்டு போகாமல், பளபளப்புடன் இருக்கும்.
மாய்ச்சரைசர்கள், சருமத்தின் வெளிப்புற அடுக்கின் நீர்த்தன்மையை அதிகரித்து, வறண்டு போகாமல், சருமத்திற்கு மிருது தன்மையை அளிக்கிறது. வெளியில் செல்லும் போது, சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தலாம்.
குளிர் காலத்தில் அதிகம் வியர்க்காது. இதனால், சருமத்தை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு , பாலுடன், கடலை மாவை கலந்து, கிளென்சர்களாக பயன்படுத்தலாம்.
குளிர் காலங்களில் ஜெல் கிளென்சர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குளிர் காலங்களில், சருமத்தில் தங்கி, பொலிவிழக்க செய்யும் இறந்த செல்களை நீக்குவது மிகவும் முக்கியம்.
இதற்கு ஒரு ஸ்பூன் ரவையுடன், இரண்டு மடங்கு கொண்டைக்கடலை மாவு மற்றும் தயிர் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதனால், இறந்த செல்கள் நீங்கி, முகம் பளபளப்புடன் திகழும்.