அடர்த்தியான கூந்தலை கொள்ள எந்த பெண்ணுக்கும் ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால் அடர்த்தியான கூந்தலில் அடிக்கடி சிக்கல் உண்டாகி உங்களை எரிச்சலடையச் செய்யும். உங்கள் ஹேர் ஸ்டைலிஸ்ட்டுக்கு கண்டிப்பாக நீங்கள் ஒரு சவாலாகத் தான் இருப்பீர்கள். அடர்த்தியான கூந்தலை சிகை அலங்காரம் செய்வது ஒன்றும் எளிய காரியம் இல்லை. அதற்கு அதிக உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும்.
ஸ்டைலான அடுக்குகள்:
சிகை அலங்காரத்திற்கு செல்லும் போது லேயர் எனப்படும் அடுக்குகளில் கூந்தலை வெட்டுங்கள். அடர்த்தியான கூந்தல் பிரச்சனைகளை ஒரு வகையில் இது தீர்க்கும். இப்படி வெட்டுவதால் உங்கள் கூந்தல் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நீளத்தில் இருக்கும். அதனால் உங்கள் கூந்தலின் கணம் குறையும். அது உங்களுக்கு வசதியாகவும் இருக்கும். அடர்த்தியான கூந்தல் இருந்தால் அடுக்குகள் போல் முடியை வெட்டினால் உங்களுக்கு தோதாக அது அமையும்.
என்ன ஷாம்பு வாங்க வேண்டும்?
கடைக்கு செல்லும் போது உங்கள் கூந்தலுக்கு எந்த ஷாம்பு ஒத்து வருமோ அதனையே வாங்குங்கள். அடர்த்தியான கூந்தல் வேண்டும் என நினைப்பவர்கள் பயன்படுத்தும் ஷாம்புவாகவும் அது இருக்கலாம். அடர்த்தியான கூந்தல் உடையவர்களுக்காக உள்ள ஷாம்புவை தேர்ந்தெடுங்கள். அப்படி செய்வதால் அடர்த்தியான கூந்தலால் ஏற்படும் பிரச்சனைகளை ஓரளவுக்கு சமாளிக்கலாம். அடர்த்தியான கூந்தல் உடையவர்கள் கூந்தல் பராமரிப்புக்கான பொருட்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அப்படி சரியாக தேர்ந்தெடுத்தால் உங்கள் கூந்தல் பிரச்சனைகளை அது பார்த்துக் கொள்ளும்.
கூந்தலை நீளமாக வளர்த்துக் கொள்ளுங்கள்:
நீண்ட கூந்தல் பல விதமான கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக அமையும். அடர்த்தியான கூந்தல் உடையவர்களின் கூந்தல் நீளம் குறைவாக இருந்தால் எண்ணிலடங்கா பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதனால் அப்படிப்பட்டவர்களின் கூந்தல் நீளமாக இருக்க வேண்டும். அதனால் பார்ப்பதற்கும் அது கூடுதல் அழகை சேர்க்கும். மேலும் உங்கள் முகத்தில் முடி விழுவதையும் அது தடுக்கும். மொத்தத்தில் இது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
கூந்தலை சடை போட்டு பின்னிக் கொள்ளுங்கள்:
கூந்தலை சடை போட்டு பின்னிக் கொண்டால் அதுவே உங்களுக்கு பெரிய நிவாரணியாக இருக்கும். அப்படி செய்வதால் தலை முடி முகத்திலும் வாயிலும் விழுவதை தவிர்க்கலாம். அழகை மேம்படுத்தும் ஸ்டைல் ஜெல் அல்லது ஹேர் ஸ்ப்ரே போன்றவைகளை பயன்படுத்தியும் கூந்தலை பராமரிக்கலாம். அடர்த்தியான கூந்தலால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது என்பது கடினமான ஒன்று தான். ஆனால் சில டிப்ஸ்களை பின்பற்றினால் அதற்கான தீர்வை சுலபமாக பெறலாம். நீங்களும் அவைகளை பின்பற்றி மாற்றங்களை கண்டு ஆச்சரியப்படுங்கள்.