வேப்பிலை:
இருக்கும் அனைத்து இலைகளைக் காட்டிலும் வேப்பிலையையே மிக சிறந்த இயற்கை மூலிகையாக கருதுகின்றனர். இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில் ஒரு அற்புத பளபளப்பு உண்டாகும்.
சந்தனக் கட்டை:
மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் ஒன்று. இது ஒரு அற்புத மூலிகையாகும். மருந்துகளிலும், அனைத்து தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் சந்தனம் மூலப்பொருளாக விளங்குகின்றது. சந்தனம், தோலில் உள்ள வியாதிகள், முகப் பருக்கள், அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகளையும் குணமாக்க பயன்படுகின்றது. சந்தனத்தை வெளிபுற தோலில் பயன்படுத்தும் போது தோலுக்கு இதமான குளிர்ச்சித்தன்மை கிடைக்கும்.
மஞ்சள்:
மஞ்சள் இயற்கையான சரும பாதுகாப்பு மற்றும் பளிச்சென்ற சருமத்தை தரும் சக்தியை கொண்டுள்ளது. வீக்கத்தை குறைக்கும் சக்தியும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தியும் மஞ்சளில் இயற்கையாவே அமைந்திருக்கின்றது. பருக்கள், அரிப்புகள் மற்றும் பருக்களால் உருவாகும் நிறமிகள் ஆகியவற்றை மஞ்சள் நீக்க வல்லது.
கற்றாழை:
கற்றாழை நமது தோலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும் தாவரமாகும். எரிச்சலைக் குறைக்கும் சக்தியும் குணமாக்கும் சக்தியும் கற்றாழைக்கு உண்டு. இந்த குணாதிசயத்தை கொண்ட கற்றாழை வெளிப்புற தோலில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும் பெரும் பணியையும் செய்யும் திறன் கொண்டுள்ளது.