“கேர்ள்ஸின் இப்போதைய ஹாட் ட்ரெண்ட், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவின்காஸ்ட்யூமான ஸ்கர்ட் – டாப் ஸ்டைல்தான். இந்த இதழ்ல நாம பாக்கப்போறதும் ஒரு இன்ட்ரஸ்டிங் ஸ்கர்ட்தான். இந்த ஸ்கர்ட்டோட ஸ்பெஷலே, ஃபெஸ்டிவல் அல்லது கேஷுவல்னு ரெண்டு விதமா யூஸ் பண்ணிக்கலாம். டிசைனிங் டீட்டெயில்ஸ் தெரிஞ்சுக்கலாமா?!” – சென்னை, அண்ணா நகரில் உள்ள ‘ஸ்டுடியோ 149 பை ஸ்வாதி’ டிசைனர் டிரெஸ் ஸ்டுடியோவின் நிர்வாகி ஸ்வாதி புருஷோத்தமன், குதூகலத்துடன் பேசினார்…
“ரொம்ப மாடர்னான வெஸ்டர்ன் உடைகளை அதிகம் விரும்புறவங்களுக்கு மட்டும் இல்லாம, இந்த டிசைனர் ஸ்கர்ட் வித் டாப், ட்ரெடிஷனல் விரும்பிகளுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்!
டாப்ஸ்: ரா சில்க் மெட்டீரியலில், ஜர்தோஸி மற்றும் சம்கி வேலைப்பாடுகள் செய்த டாப்ஸ். கழுத்துக்கு ‘ஹை நெக்’ டிசைன். டாப்ஸின் பின்புறம் ‘ட்ரையாங்கிள் கட் ஓபன்’ உள்ளது. இதைவிரும்பாதவங்க, ஓபன் இல்லாமலும் டிசைன் செஞ்சுக்கலாம்.
குறிப்பு: இந்த டாப்ஸை பிளெய்ன் சாரி, டிசைனர் சாரி, சில்க் சாரிக்கு பிளவுஸாவும் மேட்ச் பண்ணிக்கலாம்.
துப்பட்டா: ஜியார்ஜெட் மெட்டீரியல்ல டிரேப்டு (draped) ஸ்டைல் கட்டிங். டிஸ்ப்ளே பொம்மையின் தோளில் போட்டு, அருவி விழுவதுபோல் அப்படியே அன்ஈவனா கட் செய்தது, பார்க்க அடுக்கடுக்கான மடிப்புகளுடன் அழகா இருக்கும். ஹைலைட் செய்ய, ஓரங்கள்ல மெல்லிய கோல்டன் கலர் ஜரியை அட்டாச் செஞ்சிருக்கேன்.
குறிப்பு: இந்த துப்பட்டாவை ஜீன்ஸ், ஸ்கர்ட் அண்ட் டாப்ஸுக்கு ஸ்டோலாவும் பயன்படுத்தலாம்.
ஸ்கர்ட்: இந்த ஸ்கர்ட்ல மொத்தம் மூணு லேயர்கள் இருக்கு.
முதல் லேயர் – இந்த லேயர் பிரின்டட் கோட்டா சில்க் மெட்டீரியலால் ஆனது. இதையும் துப்பட்டாவை டிசைன் செய்த மாதிரியே, பொம்மைக்கு அணிவித்து அப்படியே கட் செய்ததாலதான், நேச்சுரலான இந்த ஃப்ளோ கிடைக்குது. இதோட ஓரங்களில் ஜரியுடன் கூடவே, ஜிங்கிள் பெல் ஃபீல் கொடுப்பதுபோல, சிறு சிறு கோல்டன் பெல்கள் அட்டாச் செய்திருக்கேன்.
இரண்டாம் லேயர் – இது லேஸ் மெட்டீரியலால் ஆனது.
மூன்றாவது லேயர் – ஜியார்ஜெட் மெட்டீரியல் முக்கால் பகுதியும், அடியில் முதல் லேயருக்கு பயன்படுத்தின பிரின்டட் கோட்டா சில்க்கில் ஃபிரில் போல தைத்தும் அட்டாச் செய்திருக்கேன்.
குறிப்பு: இந்த ஸ்கர்ட்டோடயும் `நானும் ரவுடிதான்’ நயன்தாரா, மாதிரி பிளெய்ன் டி-ஷர்ட்டும், ஒரு ஸ்டோலும் போட்டா… நீங்களும் நயன்தாராதான்.”