28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
onion hair grow
தலைமுடி சிகிச்சை

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் – 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)
2. வெள்ளைக் கரிசாலைச் சாறு – 0.5 லிட்டர்
3. கீழாநெல்லிச் சாறு – 0.5 லிட்டர்
4. அவுரி சாறு – 0.5 லிட்டர்
5. கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர்
6. பொடுதலைச் சாறு – 0.5 லிட்டர்
7. நெல்லிக்காய்ச் சாறு – 0.25 லிட்டர்
8. சோற்றுக் கற்றாழைச் சாறு – 0.25 லிட்டர்

(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)

இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.

இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.

இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!p26b e1457361686490

Related posts

இளநரையா?

nathan

25 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கு ஏன் முடி சீக்கிரம் உதிர்கிறது தெரியுமா?

nathan

நீளமான ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்போ இதை படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இளநரையை தடுக்க ஈஸியான வழிகள்!!!

nathan

வேம்பாளம் பட்டை -கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்

nathan

மென்மையானக் கூந்தலைப் பெற

nathan

உங்களுக்கு சுருட்டை முடியா? இந்த மாஸ்க் போடுங்க…

nathan

முடியை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த எளிய மற்றும் உபயோகமான வழிகளே போதுமாம்…!

nathan

கூந்தலுக்கு உகந்த உருளைக்கிழக்கு குளியல் பவுடர்

nathan