27 C
Chennai
Wednesday, Nov 20, 2024
2 mint chutney 1653054530
சட்னி வகைகள்

புதினா சட்னி

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 8-10

* பூண்டு – 3 பல்

* பச்சை மிளகாய் – 2

* புதினா – 2 கப்

* புளி – 1 துண்டு

* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, புதினாவை சேர்த்து, அது சுருங்கும் வரை சில நொடிகள் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் துருவிய தேங்காய், புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

Pudina Chutney/Mint Chutney Recipe In Tamil
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், புதினா சட்னி தயார்.

Related posts

வல்லாரை கீரை சட்னி

nathan

தேங்காய் தயிர் சட்னி

nathan

பச்சை மிளகாய் வெங்காய சட்னி

nathan

பீட்ரூட் சட்னி

nathan

சூப்பரான செட்டிநாடு மிளகாய் சட்னி

nathan

கேரட் சட்னி

nathan

தோசை, இட்லி, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் இந்த பீர்க்கங்காய் சட்னி…

sangika

கொத்தமல்லி சட்னி

nathan

சூப்பரான புளி சட்னி

nathan