24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
restaurantstylechicken555recipe 1612943364
அசைவ வகைகள்

சிக்கன் 555 ரெசிபி

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 250 கிராம்

* மிளகாய் தூள் – 1 டேபிள் பூன்

* மஞ்சள் தூள் – 1 டீபூன்

* கரம் மசாலா – 1 டீபூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* அரிசி மாவு – 1 டீபூன்

* ரவை – 1 டீபூன்

* அரிசி மாவு – 1 டீபூன்

* எண்ணெய் – 3 டேபிள் பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பௌலில் கழுவிய சிக்கனைப் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, அரிசி மாவு, ரவை மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்க வேண்டும்.

* அரை மணிநேரம் கழித்து, ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் சிக்கன் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்க வேண்டும்.

* இறுதியில் அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, அதை பொரித்த சிக்கன் துண்டுகளின் மீது தூவினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 555 ரெசிபி தயார்.

Related posts

சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி

nathan

சூப்பரான கணவாய் மீன் வறுவல்

nathan

ரமலான் ஸ்பெஷல்: பெப்பர் சிக்கன் வறுவல்

nathan

உருளைக்கிழங்கு மீன் குழம்பு,

nathan

காரைக்குடி நண்டு மசாலா

nathan

தேங்காய்ப்பால் இறால் குழம்பு

nathan

சுவையான இறால் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடுங்க

nathan

சுவையான மட்டன் கடாய்

nathan

சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி

nathan