27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
Rose Water Skin e1382370454255
சரும பராமரிப்பு

அழகை மென்மேலும் அதிகரிக்க செய்ய உதவும் ரோஸ் வாட்டர்

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை, ரோஸ் வாட்டரை சரியாக பயன்படுத்தி வந்தால் போக்கிக்கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாது அழகை மென்மேலும் அதிகரிக்க செய்யவும் முடியும்.

இந்நிலையில், ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மென்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைத்து, சருமமே இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

ரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்கும் வழிமுறைகள் :

• ரோஸ் வாட்டர் பாட்டிலை 1/2 மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக காணப்படும்.

• கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் இந்த முறையை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

• மென்மையான சருமம் தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

• வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.

• இரவில் படுக்கும் போது, வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால், அதனை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், மேக்கப் நீங்குவதோடு, சருமமும் மென்மையோடு இருக்கும்.

• ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். மேலும் ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக வெளிக்காட்டும்.
அட நீங்களும் தான் கொஞ்சம் பாவித்து பாருங்களேன்..!
Rose Water Skin e1382370454255

Related posts

மேலுதட்டில் வளரும் உரோமங்களை போக்கும் வழி

nathan

வேப்பிலை தயிர் கலந்த மாஸ்க் உங்கள் சருமத்தில் போட்டால் என்னாகும்?

nathan

சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறை!…

sangika

தினமும் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள்

nathan

சரும நிறத்தில் மாற்றம் ஏற்படாமல் பாதுகாக்க…

sangika

கழுத்து பராமரிப்பு

nathan

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா?

nathan

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

sangika