25.2 C
Chennai
Wednesday, Nov 20, 2024
1 srilankan chicken curry 1666873414
அசைவ வகைகள்

இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

* நெய்/வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் – 4

* வெந்தயம் – 1 டீஸ்பூன்

* பட்டை – 1 சிறிய துண்டு

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* சீரகத் தூள் – 1 டீஸ்பூன்

* சோம்பு தூள் – 1 டீஸ்பூன்

* தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)

* சிக்கன் – 1 கிலோ

* ரம்பை இலை – 1

* வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்

* கெட்டியான தேங்காய் பால் – 1 கப் / 250 மிலி

செய்முறை:

* முதலில் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக சிறிது நேரம் வதக்கி, இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

Sri Lankan Chicken Curry Recipe In Tamil
* பின்பு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் அதில் தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு எண்ணெய் பிரிய வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் சிக்கனை கழுவிப் போட்டு நன்கு மசாலா சிக்கனில் ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும். சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் ரம்பை இலை, வினிகர் சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து, 40-45 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு தயார்.

Related posts

சுவையான… முட்டை தொக்கு

nathan

முட்டை பெப்பர் ஃபிரை

nathan

டேஸ்டி சிக்கன் வறுவல்

nathan

சத்தான கேரட் – முட்டை பொரியல்

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

செட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி?

nathan

மாட்டு இறைச்சி சமோசா

nathan

நண்டு மசாலா

nathan

சிக்கன் கிரேவி / Chicken Gravy

nathan