புதுமை படைப்பதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என குஜராத்தை சேர்ந்த பெண்கள் நிரூபித்துள்ளனர். இன்று சாலை விபத்துகள் ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் பெரும்பாலும் நடந்தேறுகிறது.
ஓட்டுநரின் கவனக் குறைவால் குழந்தைகள், குறிப்பாக பள்ளியை கடக்கும் போதுதான் இந்த விபத்துக்கள் பெரும்பாலும் அரங்கேறுகிறது. இதை தடுக்க புதுமை விரும்பிகளான சௌமியா பண்டியா தக்கர் மற்றும் சகுந்தலா பண்டியா காயத்ரி ஆகியோர் ஒரு புதுமையான ஐடியா செய்துள்ளனர். அதாவது நடைபாதையினர் சாலையை கடக்க பயன்படுத்தும் வரிக்குதிரை சாலை கடப்பில், 3டி எனும் முப்பரிமாண ஒரு புதுமையான பெயிண்டிங்கை செய்து பாராட்டை பெற்றுள்ளனர்.
அதாவது இந்த முப்பரிமாண வரிக்குதிரை அமைப்பு, அதை கடக்கும் மக்களுக்கு சாதாரண வரிக்குதிரை கோடுகளாகதான் தெரியும். ஆனால் சாலையில் வரும் வாகன ஓட்டுநர்களின் பார்வையில் பார்த்தால், அது சாலை பிளாக் போல தெரியும். அதனால் ஓட்டுநர்கள் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்வார். இதனால் விபத்து தடுக்கப்படும். இதுபோன்ற பெயிண்டிங், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அருகே குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 90% விபத்துகள் தடுக்கப்படும். இதையே நாமும் பின்பற்றலாமே!!.