தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 250g
சீனி – 200g
தேங்காய் துருவல் – 1/2 கப்
கோதுமைமா – 250g
ஏலக்காய்த்தூள் – 2தேக்கரண்டி
உப்பு, மஞ்சள்தூள் ,நெய் – தேவையான அளவு.
செய்முறை
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கோதுமைமாவை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி மூடி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய கடலைப்பருப்பு அவிந்ததும் நீரை வடிய வைத்து ஆற விடவும் .
ஆறியதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறுக்கமாக அரைத்துக் கொள்ளவும்.
சீனியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவை, ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறவும்.
இறுகி வரும் பக்குவத்தில் சிறிது நெய் விட்டு, நன்றாக கிளறி இறக்கவும்.
கோதுமைமாவை ரொட்டி போல் செய்து கடலைப்பருப்பு கலவையை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.