தேவையான பொருட்கள் :
பாகற்காய் – அரை கிலோ
வெல்லம் – 100 கிராம்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
தாளிக்க :
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை :
• பாகற்காயை விதை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
• வெல்லத்தை தூளாக்கி வைக்கவும்.
• புளியை 200 மி.லி நீரில் கரைத்து வைக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் புளி கரைசலை ஊற்றி, பாகற்காயை கொட்டி வேக வைக்கவும்.
• வெந்து வரும் போது மிளகாய் தூள், தனியா தூள், வெல்லத்தை கலந்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்.
• கடைசியாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பாகற்காய் பச்சடியில் சேர்க்கவும்.
• இந்த பச்சடியில் இனிப்பு, புளிப்பு, கசப்பு என பல சுவைகள் கலந்து இருக்கும். குழந்தைகள் இதை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.