26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
black pink purple hair color sml
ஹேர் கலரிங்

கூந்தலுக்கு அழகு சேர்க்கிறதா ஹேர்கலரிங்?

ஹேர் கலரிங் ‘என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர் , தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர்கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன.

ஹேர் கலரிங் வகைகள்

கூந்தலின்நீளத்தை பொறுத்து, அதற்கு ஹேர் கலரிங் செய்வதற்கான செலவும் ஏற்படும். குட்டையான மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு, “ஹேர்கலரிங்’செய்தால், மிக அழகாக தோற்றமளிக்கும். “ஹேர்கலரிங்’செய்பவர்கள், நிரந்தமாக செய்து கொள்ளுவதா அல்லது தற்காலிகமாக செய்து கொள்ளுவதா என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நரை முடியை மறைப்பதற்காக ஹேர் கலரிங் செய்ய விரும்புபவர்கள், நிரந்தமான ஹேர் கலரிங் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், ஒட்டுமொத்த கூந்தலையும் ஹேர்கலரிங் செய்து கொள்ளுவதா அல்லது ஹைலைட் மட்டும் செய்து கொள்ளுவதா என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

ஹேர்கலரிங் முறைகள்

ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர் கலரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள். கூந்தல் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுவதற்கு “ஹைலைட்டிங்’ என்று பெயர். பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம், நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என, நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், காப்பர் அல்லது சிவப்பு நிற கலரிங் செய்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். ஏனென்றால், இவை விரைவில், வெளிறிவிடும் தன்மை கொண்டது. ஹேர் கலரிங் செய்த பின், அதற்கென தகுந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களையே பயன்படுத்த வேண்டும். ஹேர் கலரிங் செய்த பின், எவ்வாறு கூந்தலை பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று செயல்படலாம். ஹேர் கலரிங் செய்வதற்கு, பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் நல்ல தரமானது தானா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவது நல்லது. நிரந்தரமான, வளமான தலைமுடி வேண்டும் என விரும்புவோர், “ஹேர்கலரிங்’ஆசைக்கெல்லாம் அடி பணியக்கூடாது.

ஹேர் கலரிங் விதங்கள்

ஹேர் கலரிங்கில் டெம்ப்ரரி ஹேர்கலர் என்பது இன்ஸ்டண்ட் காபி மாதிரி! பார்ட்டிக்கு அவசரமாய் புறப்பட போகும் போது இந்த வித ஹேர் கலரிங், சட்டென கை கொடுக்கும். இதைப் போட்டுக் கொண்டு பார்ட்டிக்குப் போய் விடலாம். வந்ததும் ஷாம்பு போட்டு குளித்து விட்டால் நிறம் மறைந்து விடும். பேன்ஸி கலரிங் விதம் விதமாய் கிடைக்கும். செமி டெம்ப்ரவரி ஹேர் கலரிங்கில் கூந்தல் பாதிக்கப்படாது ஆனால் உடனே நிறம் மறையாது. சில நாட்கள் கழித்து அதிகம் ஷாம்பூ உபயோகப்படுத்த ஆரம்பித்த பிறகே மறையும். பெர்மனன்ட் ஹேர்கலரிங்கில் நீங்கள்விரும்பும் வண்ணம் உங்கள் கூந்தலில் நிரந்தரமாய் தங்கிவிடும்.black pink purple hair color sml

Related posts

நரை முடியை மறைக்கும் ஹேர் பேக்குகள் !!

nathan

கூந்தலுக்கு இயற்கை நிறமூட்ட

nathan

ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா?

nathan

இயற்கை வைத்தியங்கள் மூலமாக நரை முடியை கருமையாக மாற்றவும், கலரிங்க் செய்யவும் வழிமுறைகள்

nathan

இளநரை ஏன் ஏற்படுகிறது?.. இவை தான் காரணங்களாக இருக்கலாம்…

sangika

தலை வாரும் போது கவனிக்க வேண்டியவை

nathan

கெமிக்கல் டை உபயோகப்படுத்துகிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்கள்!

nathan

இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்!

nathan

ஹேர்கலரிங் – ஒரு நிமிடம்..

nathan