25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
ing
தலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்தலை முற்றாக ஒழிக்கும் இஞ்சி

நீங்கள் பொடுகுத் தொல்லை மற்றும் தலை­முடி உதிர்தல் போன்ற பிரச்சி­னை­களைச் சந்­திக்­கி­றீர்­களா? அதற்கு இது­வரை தீர்வு கிடைக்­காமல் அலை­ப­வரா? அப்­ப­டி­யெனில், இக்­கட்­டுரை உங்­க­ளுக்­கா­னது.

ஏனெனில், இங்கு மருத்­துவ குணம் அதிகம் நிறைந்த ஒரு பொரு­ளான இஞ்­சியைக் கொண்டு எப்­படி தலை­முடி பிரச்சி­னை­க­ளுக்கான தீர்வு காண்­ப­து குறித்து கொடுக்­கப்­பட்­டுள்­ளது.
இஞ்சி உடல் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்த மட்­டு­மின்றி, தலை­மு­டியின் ஆரோக்­கி­யத்­திற்கும் நல்­லது.

முன்­பெல்லாம் தலை­மு­டியின் வளர்ச்­சிக்கு இஞ்­சியைப் பயன்­ப­டுத்தி வந்­தார்கள்.
மேலும் ஆயுர்­வேதம் கூட தலை­மு­டியின் வளர்ச்­சியை அதி­க­ரிக்க இஞ்­சியைப் பரிந்­து­ரைக்­கி­றது. சரி, இப்­போது இஞ்சி எப்­படி நம் தலை­முடி பிரச்சி­னை­க­ளுக்கு தீர்­வ­ளிக்­கி­றது என்­பது குறித்து விரி­வாகக் காண்போம்.

சத்­துக்கள் :
இஞ்­சியின் வேரில் முடியின் வலிமை, ஆரோக்­கியம் மற்றும் மென்­மையை அதி­க­ரிக்கும் சத்­துக்­க­ளான மக்­னீ­சியம், பொஸ்­பரஸ், பொட்­டா­சியம் மற்றும் விற்ற­மின்கள் போன்­றவை ஏரா­ள­மாக நிறைந்­துள்­ளன.

முடி உதிர்தல் :
இஞ்சி முடியின் ஆரோக்­கியம் மற்றும் வலி­மையை அதி­க­ரிப்­ப­தோடு, முடி உதிரும் பிரச்­சினை இருந்­தாலும், அதனை சரி­செய்து, மயிர்க் ­கால்­களை வலி­மை­யாக்கும்.
பொடுகுத் தொல்லை பொடுகுத் தொல்­லையால் பெரும்­பா­லான மக்கள் கஷ்­டப்­ப­டு­கின்­றனர்.
அவர்கள் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாற்­றினை 1 டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்­ணெ­யுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் ஸ்கல்ப்பில் தடவி இரவு முழு­வதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்­படி செய்து வந்தால் பொடுகுத் தொல்லை அகலும்.

முடியின் வளர்ச்சி :
உங்­க­ளுக்கு நீள­மான முடி வேண்­டு­மானால், இஞ்­சியைப் பயன்­ப­டுத்­துங்கள். இஞ்­சியில் உள்ள பொருட்கள் ஸ்கல்ப்பை ஆரோக்­கி­ய­மாக வைத்து, முடியின் வளர்ச்­சியை அதி­க­ரிக்கும்

இரத்தோட்டம் மேம்­படும் :
இஞ்­சியைக் கொண்டு தலை­மு­டியைப் பரா­ம­ரித்தால், தலையில் இரத்த ஓட்டம் அதி­க­ரித்து, மயிர்­கால்­க­ளுக்கு வேண்­டிய சத்­துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதி­க­ரிக்கும்.

ஃபேட்டி அசிட் :
இஞ்­சியில் ஃபேட்டி அசிட்­டுகள் அதிகம் நிறைந்­துள்­ளன.இது முடி உதிர்­வதைக் குறைத்து, தலை­முடி மெலி­வதைத் தடுக்கும்.

இஞ்சி சாறு மற்றும் ரோஸ் வோட்டர் :
இஞ்சி சாற்­றினை ரோஸ் வோட்­ட­ருடன் சேர்த்து கலந்து, ஸ்கல்ப்பில் தடவி ஊற வைத்து அல­சினால், பொடுகுத் தொல்­லையில் இருந்து உட­னடி நிவா­ரணம் கிடைக்கும்.

இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு :
இஞ்சி சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அதனை தலையில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து உடனே அலசி விட வேண்டும். இல்லாவிட்டால், அவை ஸ்கல்ப்பை பெரிதும் பாதித்துவிடும்.
ing

Related posts

முடி உதிராமல் இருக்க முடியை கட்டுங்க!

nathan

பார்லர் செல்லாமலே கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்யனுமா? நீங்கள் அறிந்திராத 5 எளிய டிப்ஸ் !!

nathan

தலை முடி உதிரும் பிரச்சனைக்கு ஒரே வாரத்தில் நல்ல தீர்வு!….

nathan

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

உங்களின் கூந்தலுக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் தரும் அதிசயமான நன்மைகள்

nathan

முடி அடர்த்தியாக வளர…. இய‌ற்கை வைத்தியம்,

nathan

ஹேர்கலரிங் செய்யும் முன்னர் தெரிந்துகொள்ளவேண்டியவை….

nathan

திடீர் கூந்தல் உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்

nathan

ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும்…

sangika