25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
11f691c6 20a3 4832 9db1 89de56840263 S secvpf
சட்னி வகைகள்

கொள்ளு சட்னி

தேவையான பொருட்கள் :

கொள்ளு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 1/2 கோப்பை
தக்காளி – 1
புளி – 1 கொட்டை
வர மிளகாய் – 2
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை :

• கொள்ளுவை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊற வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

• பிறகு வர மிளகாய், தக்காளி, பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

• அதனுடன் சீரகம், மிளகு, புளி சேர்க்கவும்.

• அனைத்தையும் நன்றாக வதக்கிய பிறகு கொள்ளை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

• ஆறியவுடன் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

• மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை அரைத்த சட்டினியுடன் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

குறிப்பு:

கொள்ளில் சிறு சிறு கற்கள் இருக்கும். அதனால் நன்றாக களைந்து வேக வைக்கவும். 2. உடல் எடையை குறைக்க கொள்ளு மிகவும் பயனளிக்கும்.11f691c6 20a3 4832 9db1 89de56840263 S secvpf

Related posts

கடலை சட்னி

nathan

சுவையான கத்திரிக்காய் சட்னி

nathan

சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி

nathan

பருப்பு துவையல்

nathan

கத்தரிக்காய் சட்னி

nathan

உருளைக்கிழங்கு சட்னி

nathan

வெந்தயத் துவையல் (சட்னி)

nathan

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

nathan

சப்பாத்திக்கு சுவையான தக்காளி தால்

nathan