தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு கப்,
உதிர்த்த சோளம் – ஒரு கப்,
பச்சைப் பட்டாணி – ஒரு கப்,
முந்திரி துண்டு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் முந்திரியை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
* அதே எண்ணெயில் கடுகு, சீரகத்தை போட்டு தாளித்த பின் சோளம், பட்டாணி, அரிசி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, கரம்மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* நன்கு வதங்கியதும், 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூடி வேகவிடவும்.
* 3 விசில் வந்ததும், வெந்த சாத கலவையைக் கடாயில் கொட்டி எலுமிச்சை சாறு, வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடம் கிளறி, தயிருடன் பரிமாறவும்.
* சுவையான சோளம் மசாலா ரைஸ் ரெடி.