29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld3644
ஃபேஷன்

சேலையை விட்டுக் கொடுக்க மாட்டோம்!

என்னதான் நாகரிகம் மாறினாலும் மேற்கத்திய மனோபாவத்துக்கு பெண்கள் மாறினாலும், ஒரு விஷயத்தை மட்டும் அவங்கக்கிட்டருந்து பறிக்கவே முடியாது. அதுதான் சேலை. அப்பப்ப மாறிக்கிட்டே இருக்கிற ஃபேஷனுக்கேத்தபடி புதுப்புது ஸ்டைல்ல சேலை கட்ட ஆசைப்படுவாங்களே தவிர, எத்தனை பெரிய ஃபேஷனுக்காகவும் சேலையை விட்டுக் கொடுக்கவே மாட்டாங்க…” – சேலைக்கு வக்காலத்து வாங்கியபடி ஆரம்பிக்கிறார் ஷைனி அஷ்வின். முன்னணி ஃபேஷன் டிசைனரான இவர், ஆச்சி மசாலா உரிமையாளரின் முதல் மருமகள்.

மசாலா மணக்கும் வீட்டு மருமகளுக்கு ஃபேஷன் டிசைனிங்கில் ஆர்வம் வந்தது எப்படி?

எப்பவுமே என்னோட டிரெஸ்சிங் ஸ்டைல் எல்லார் கவனத்தையும் ஈர்த்திருக்கு. தனித்தன்மையோட டிரெஸ் பண்ணுவேன். கல்யாணமாகி, முதல் பெண் குழந்தை பிறந்ததும் அவளுக்குப் பார்த்துப் பார்த்து டிரெஸ் பண்ணி அழகு பார்ப்பேன். நான் எதிர்பார்க்கிற மாதிரி கிடைக்காது. அப்பதான் நானே துணி வாங்கி, என் விருப்பப்படி டிசைன் செய்து தச்சு, என் மகளுக்குப் போட ஆரம்பிச்சேன். ‘எங்க வாங்கினீங்க’னு கேட்காத ஆளே இல்லை. ஒவ்வொரு முறையும் பாராட்டுகளோடு, ‘ஆர்டர் கொடுத்தா தச்சுத் தருவீங்களா’ங்கற கேள்வியும் வரும்.

ஃபேமிலியோட எங்கயாவது ஃபங்ஷனுக்கு போனா, எல்லாரும் என் டிரெஸ்சை பாராட்டுவாங்க. இதையெல்லாம் வச்சுதான் நானே சொந்தமா யூனிட் தொடங்கலாம்னு முடிவெடுத்தேன். அத்தையும் மாமாவும் ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க… இப்ப வரை நான் மெட்டீரியல் வாங்கப் போகும் போது அத்தையும் கூட வருவாங்க. எந்தவொரு புது டிசைன் பண்ணினாலும் அத்தை, மாமா கிட்ட காட்டுவேன்…” – பெருமையாகச் சொல்கிற ஷைனி, Diadem என்கிற சொந்த லேபிளை தொடங்கி, தனது டிசைன்களை விற்பனை செய்து வருகிறார்.

யூனிட் ஆரம்பிக்கிற போதே, எக்காரணம் கொண்டும் துணிகளை வாங்கி விற்கறதில்லைனு முடிவெடுத்தேன். ஒவ்வொரு டிசைன்லயும் ஒரு பீஸ்தான் இருக்கும். அதே மாதிரி இன்னொருத்தர் கேட்டாலும் சின்னதா ஒரு வித்தியாசமாவது காட்டித்தான் டிசைன் பண்ணுவேன்…” என்கிறவருக்கு சேலைகள் வடிவமைப்பில் எக்கச்சக்க ஆர்வம்… தான் டிசைன் செய்த முதல் சேலை அனுபவத்தை மறக்காமல் நினைவு கூர்கிறார் அவர்.

அது ஒரு நெட் சாரி… ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி டிசைன் பண்ணினது. அப்ப அது ரொம்ப பிரபலமா இருந்தது. ஆனா, கடைகள்ல கிடைச்சதெல்லாமே பெரிய பெரிய பார்டர் வச்சு, கனமான புடவைகளா இருந்தது. நான் அதையே வித்தியாசமா செய்ய நினைச்சேன். கலர்கலரான நெட் யூஸ் பண்ணி, லைட் வெயிட்ல டிசைன் பண்ணின புடவை செம ஹிட். நிறைய பேருக்கு அதே மாதிரி நெட் சாரி பண்ணிக் கொடுத்தது மறக்க முடியாது…” – முதல் அனுபவம் சொல்கிற ஷைனி, ஃபியூஷன் வேலைப்பாடுகளில் எக்ஸ்பர்ட். அது அவரது ஒவ்வொரு டிசைனிலும் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிகிறது.

வெளிநாட்ல வசிக்கிற இந்தியப் பெண் ஒருத்தங்க கல்யாணத்துக்காக ஃபியூஷன் சாரி ஒண்ணு டிசைன் பண்ணினேன். அதாவது, மேல கவுன் மாதிரியும், கீழ் பாகம் சேலை மாதிரியும் இருக்கும். அவங்களுக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதுக்கப்புறம் அது மாதிரி ஃபியூஷன் ஒர்க் பண்றதுல ஆர்வம் அதிகமாயிருக்கு.வெட்டிங் கவுன்ஸ் இப்ப ரொம்பப் பிரபலமாயிட்டு வருது. கிறிஸ்தவ மணப்பெண்கள் மட்டுமில்லாம இந்து மணப்பெண்கள்கூட இப்பல்லாம் கல்யாணங்கள்ல கவுன் போடறதை விரும்பறாங்க.

காக்ரா சோளியும் லெஹங்காவும் இப்ப அவுட் ஆஃப் ஃபேஷனாயிடுச்சு. கவுன் பிடிக்காதவங்க, கான்செப்ட் சேலைகளை விரும்பறாங்க. இந்தோ வெஸ்டர்ன் ஸ்டைல்ல சேலைகளை டிசைன் பண்ணித் தரச் சொல்லிக் கேட்கறாங்க.முன்னல்லாம் கல்யாணத்துக்கு டிரெஸ் வாங்கணும்னா அம்மா, அப்பா, வீட்டுப் பெரியவங்களோட போவாங்க. இப்ப அப்படியில்லை. கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணும் பையனும் மட்டுமே ஷாப்பிங் பண்றாங்க. பாரம்பரியம், மரபுங்கிறதை எல்லாம் மீறி, இன்னிக்கு அவங்களோட தனிப்பட்ட விருப்பம்தான் பெரிசா இருக்கு.

கல்யாணப் புடவைங்கிறது உடல் முழுக்க ஜரிகை வச்சதா, ஆடம்பரமா இருக்கணும்னு நினைச்சது மாறி, இப்ப ஜரிகையே இல்லாத புடவையைத்தான் இளம் மணப்பெண்கள் விரும்பறாங்க. அதே மாதிரி கலர்ஸ்… புது கலர்கள்… அதுவும் மத்தவங்கக்கிட்டருந்து தன்னைத் தனித்துக் காட்டற மாதிரியான பளீர் கலர்கள்… இதுதான் இந்தத் தலைமுறைப் பெண்களோட சாய்ஸ்!என்னதான் இந்தோ வெஸ்டர்ன் ஸ்டைலுக்கு மாறினாலுமே சேலையை விட்டுக் கொடுக்க யாரும் தயாரா இல்லை. சேலைங்கிறது எப்பேர்பட்ட பெண்ணையும் அழகா காட்டக்கூடிய ஒரு உடை. ஜரிகை வேண்டாம்.

பளபளா சமிக்கியோ, ஸ்டோன் ஒர்க்கோ வேண்டாம்… சிம்பிளா இருக்கணும்… அதே நேரம் எல்லார் கவனத்தையும் ஈர்க்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. இம்போர்ட்டட் லேஸ் வச்ச 3 டைமன்ஷன் சேலைகள் இப்ப ரொம்ப ஹாட்! பழைய பட்டுப்புடவைக்கு டிரெண்டியா, ஜாக்கெட் தச்சுப் போடறது நடுத்தர வயதுப் பெண்கள் மத்தியில பிரபலமாகிட்டு வருது. அப்படி ஜாக்கெட்ல வித்தியாசம் காட்டறது மூலமா பழைய பட்டுப்புடவைக்கும் புது லுக் வருது” என்பவரின் லேட்டஸ்ட் அறிமுகம்மாம் அண்ட் டாட்டர் ஃபேஷன்!’அப்படின்னா?

எனக்கு என் மகள் அஷீரா ரொம்ப ஸ்பெஷல். பெரும்பாலும் நானும் அவளும் ஒரே மாதிரி டிரெஸ் பண்ணுவோம். அதைப் பார்த்துட்டு நிறைய அம்மாக்கள் அவங்களுக்கும் அவங்க பெண்குழந்தைக்கும் ஒரே மாதிரி டிசைன் பண்ணித்தரச் சொல்லிக் கேட்டாங்க. ரெண்டு பேருக்கும் ஒரே மெட்டீரியல்ல, ஒரே கலர்ல, ஒரே டிசைன்ல கேட்கறாங்க. இப்ப மதர் அண்ட் டாட்டர் கான்செப்ட் பரபரப்பா போயிட்டிருக்கு. பார்ட்டிக்கு மட்டுமில்லாம, கேஷுவல் உடைகள்லயும் இப்படி ஒரே மாதிரி டிரெஸ் பண்றதை நிறைய அம்மாக்கள் விரும்பறாங்க” என்கிற ஷைனி, சீக்கிரமே சினிமா பக்கம் போகிறார்!

இப்ப நிறைய பிசினஸ் கிரவுடுக்கும், பிரபலங்களுக்கும் டிசைன் பண்ணிக் கொடுக்கறேன். சினிமாவுல ஒர்க் பண்ண ஒரு சான்ஸ் வந்திருக்கு. சீக்கிரமே ஒரு பெரிய படத்தோட டைட்டில் கார்டுல காஸ்ட்யூம் டிசைனர்னு என் பேரைப் பார்க்கலாம். என்ன படம்… யாருக்கு டிசைன் பண்ணப் போறேங்கிறதெல்லாம் கொஞ்சம் சஸ்பென்ஸ்…” – ரகசியம் மறைத்துச் சிரிக்கிறார் ஷைனி. ld3644

Related posts

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

nathan

ப்ரைடல் ப்ளவுஸ் – விதவிதமான வடிவமைப்பும் அசத்தும் டிசைன்களும்

nathan

இந்தக் கால கணவர்கள், தங்கள் மனைவிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோமா?

sangika

கலர் கலராய் கவரும் காலணி

nathan

வளையல் வண்ண வளையல்!!

nathan

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

கண்ணாடி வளையல்களின் அற்புதங்கள்!…

sangika

ரசாயன கலப்பின்றி உருவாகும் ஆர்கானிக் ஆடைகள்

nathan

மிக மோசமான ஃபேஷன் முறைகள் எப்படி உங்களை பாதிக்கிறது என்பதை கட்டாயம் தெரிந்து தெரிந்து கொள்ளுங்கள்….

sangika