25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pulav kothukari212
அசைவ வகைகள்

கொத்துக்கறி புலாவ்

தேவையான பொருட்கள்:
கொத்துக் கறி – அரைக் கிலோ
சாதம் – 2 கப்
வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
புதினா – கைப்பிடி
பச்சைமிளகாய் – 4 (நீளமாக நறுக்கவும்)
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு
தாளிக்க :
எண்ணெய்
பிரிஞ்சி இலை
பட்டை

செய்முறை :
1.குக்கரில் கொத்துக்கறியுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2.சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்து வைக்கவும்.
3.ஒரு கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
4.அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
5.பின்னர் அதனுடன் வேக வைத்த கொத்துக் கறி சேர்த்து தேவைப்பட்டால் உப்பு போட்டு நீர் சுண்டும் வரை கிளறவும்.
6.கொத்துக் கறி கலவையுடன் வடித்த சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.
7.வையான கொத்துக் கறி புலாவ் ரெடி. சூடாக பரிமாறவும்.
pulav kothukari212

Related posts

சுவையான கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரை

nathan

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி

nathan

முட்டை அவியல்

nathan

புதினா சிக்கன்

nathan

சிக்கன் 65 செய்வது எப்படி

nathan

அரைத்துவிட்ட மீன் குழம்பு|Arachu vacha meen kulambu

nathan

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி

nathan

செட்டிநாடு மிளகு கோழி வறுவல்: ரமலான் ஸ்பெஷல் ரெசிபி

nathan