23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Hand Care Tips for Winter
அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

கை கருப்பாக உள்ளதா?

அதில் அழகிற்கு தான் அதிக பிரச்சனை ஏற்படும். குறிப்பாக கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலானது எப்பேற்பட்டவர்களையும் கருப்பாக மாற்றிவிடும்.

அப்படி கருப்பாக மாறும் இடங்களில் முகம் மற்றும் கை தான் முக்கியமானவை. இவற்றில் தினமும் முகத்திற்கு போதிய பாதுகாப்பு அளிப்போம். அதனால் முகமானது கருமை அடையாமல் இருக்கும்.
ஆனால் கைகளை நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். இதனால் தான் உடலில் கைகள் மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே கைகளும் நன்கு அழகாக இருக்க வேண்டுமானால் அதனையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இங்கு கோடையில் கைகள் கருமை அடைவதைத் தடுக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை சாறு…

அனைவருக்குமே எலுமிச்சை சாற்றின் அழகு நன்மைகளைப் பற்றி தெரியும். மேலும் இதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் இது பல அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய எலுமிச்சை சாற்றினை கருமையாக இருக்கும் கைகளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி தவறாமல் மாய்ஸ்சுரைசர் தடவிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எலுமிச்சை சாறானது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்திவிடும்.

தயிர்…

தயிர் கூட சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. அதற்கு தயிரை கைகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இந்த முறை வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.

தக்காளி ஜூஸ்…

தக்காளியிலும் சரும கருமையைப் போக்கும் சக்தி உள்ளது. எனவே தக்காளி சாற்றினை கைகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு கைகளும் பொலிவோடு பட்டுப் போன்று இருக்கும்.

மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு…

மஞ்சள் தூள் மற்றொரு சிறப்பான சரும கருமையைப் போக்கும் பொருட்களில் ஒன்று. அதற்கு மஞ்சள் தூளை எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து பாதிப்படைந்த இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரம் 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு…

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி இருப்பதால் இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது அது சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். ஆகவே உருளைக்கிழங்கு துண்டை கைகளில் நன்கு தேய்த்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகளுடன் சருமத்தின் நிறமும் அதிகரிக்க ஆரம்பிக்கும். அதிலும் இதனை தினமும் செய்து வந்தால் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெள்ளரிக்காய்…

வேண்டுமானால் வெள்ளரிக்காயைக் கூட பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் வெப்பம் தணிக்கப்படுவதோடு சருமத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும்.Hand-Care-Tips-for-Winterகோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இருக்காது.

Related posts

கவரும் கைகள் வேண்டுமா?

nathan

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்துப்படி சில செய்யக்கூடாத செயல்கள் என்ன….?

nathan

சூப்பர் டிப்ஸ்..சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…!!

nathan

அன்பையும் காதலையும் வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்

sangika

என்ன 6 விஷயங்கள் அவை?….

sangika

சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த வங்கி அதிகாரி -மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை…

nathan

பாதிப்படைந்த சருமத்தை சரி செய்வதற்கு இயற்கை முறையில் சிகிச்சை…

sangika

சுவையான பச்சை பயறு பொரியல்

nathan