29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Pregnancy Stretch Marks
சரும பராமரிப்பு

உடம்புல ஸ்ட்ரெட்ச் மார்க் அதிகமா இருக்கா? அதை போக்க சில டிப்ஸ்…

உடலின் வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்ற கோடுகள் காணப்படும். அது தான் ஸ்ட்ரெட்ச் மார்க். இந்த தழும்புகள் பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும். அதே நிலை தான் குண்டாகி, ஒல்லியானவர்களுக்கும். இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன.

என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன. ஏனெனில் அனைவருக்குமே அந்த வகையான கெமிக்கல் கலந்த செயற்கைப் பொருட்கள் சரியான பலனைத் தரும் என்று சொல்ல முடியாது. எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் அந்த மாதிரியான தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, செய்து பாருங்களேன்…
Pregnancy Stretch Marks
உடற்பயிற்சி

20 1353391972 stretch 1
உடற்பயிற்சியை வைத்தே ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் சருமத்திற்கு சரியான ஒருவித பயிற்சியை கொடுப்பதால், அந்த பயிற்சியால், சருமத்தில் இருக்கும் அந்த ஸ்ட்ரெட்ச் மார்க் மறைய ஆரம்பிக்கும்.

ஆரோக்கிய உணவுகள்

20 1353392110 stretch 2
உணவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் சி, ஈ சத்துக்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் புதிய திசுக்கள் வளர்ச்சியடைவதோடு, பாதிக்கப்பட்ட திசுக்களும் சரியாகும். அதுமட்டுமின்றி ஜிங்க் சத்துள்ள உணவுகளான நட்ஸ் மற்றும் விதைகளையும் சேர்க்க வேண்டும். மேலும் வைட்டமின் கே உள்ள உணவுகளான பால் பொருட்கள், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டால், பழுதடைந்த திசுக்கள் குணமடைந்து, தழும்புகள் மறைந்துவிடும்.
கற்றாழை

20 1353392128 stretch 3
கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி, சருமம் அழகாகும். ஏனெனில் அதில் உள்ள நொதிப் பொருட்கள், பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி, சருமத்தை ஈரப்பசையுடன் ஆரோக்கியமாக வைக்கிறது.
லாவெண்டர் ஆயில்

20 1353392187 stretch 4
ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்க சிறந்த பொருள் என்றால், அதில் லாவெண்டர் ஆயிலும் ஒன்று. அதிலும் இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்து வந்தால், புதிய செல்கள் உருவாகி, ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைய வைக்கும்.
ஆப்ரிக்காட் ஸ்கரப்

20 1353392209 stretch 5
ஆப்ரிக்காட் பழத்தை வைத்து தழும்பு உள்ள இடத்தில் ஸ்கரப் செய்தால், அது அங்குள்ள சருமத் துளைகளை விரிவடையச் செய்து, அதில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை கண்டுபிடித்து, அதன் நிறத்தை மங்க வைத்து, நாளடைவில் மறைய வைத்துவிடும்.
நறுமணமிக்க எண்ணெய்கள்

20 1353392236 stretch 6
அவோகேடோ, பாதாம் மற்றும் ஜோஜோபா போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தினால், அவை ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும். அதிலும் இந்த எண்ணெய்களை லாவெண்டருடன் சேர்த்து தடவி மசாஜ் செய்தால், மறுமுறை அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கும்.
கொக்கோ வெண்ணெய்

20 1353392267 stretch 7
பிரசவத்திற்குப் பின் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுப்பதற்கு கொக்கோ பட்டர் சிறந்ததாக இருக்கும். அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போதே தடவி மசாஜ் செய்து வந்தால், திசுக்கள் பாதிப்படையாமல், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுககலாம். அதையே மார்க்குகள் வந்த பின்பு செய்தால், அந்த தழும்புகளை மறைய வைக்கலாம்.

Related posts

உங்களுக்கு சருமத்தை மிருதுவாக்கி பொலிவாக்க வேண்டுமா?இதை முயன்று பாருங்கள்..

nathan

நீங்கள் குப்பையில் எறியும் தேயிலை, ஆரஞ்ச் தோலில் இத்தனை நன்மைகளா? அப்ப இத படிங்க!

nathan

பிரசவ தழும்புகளை மறைய வைக்கும் அற்புத மூலிகைகள் !!

nathan

சரும சுருக்கத்தை போக்கும் வோட்கா பேஷியல்

nathan

கிளியோபாட்ராவின் ரகசிய அழகு குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ் கழுத்தைச் சுற்றி கொஞ்சம் புளி தடவினா காணாமல் போகும் கருமையான படலம்..!!

nathan

தெரிஞ்சிக்கங்க…மஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா?

nathan

பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

வாழைப்பழ தோல் எப்படி உங்கள் சருமத்திற்கு நிறம் அளிக்கும்?

nathan