23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அசைவ வகைகள்அறுசுவை

பட்டர் ஃபிஷ் ஃப்ரை | Butter Fish Fry

பட்டர்-ஃபிஷ்-ஃப்ரை-300x225 (1)தேவையான பொருட்கள்:

  • சால்மன் மீன் – 1 கிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி – 1/4 கப் (பேஸ்ட் செய்தது)
  • பாதாம் – 1/4 கப் (பேஸ்ட் செய்தது)
  • சோள மாவு – 1-2 கப்
  • முட்டை – 2 பால் – 1/2 கப்
  • மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணெய் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், முந்திரி பேஸ்ட், பாதாம் பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் மீனில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். அடுத்து ஒரு பெரிய பௌலில் சோள மாவு, முட்டை, பால், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் ஒரு மீன் துண்டை எடுத்து, கலந்து வைத்துள்ள சோள மாவுக் கலவையில் பிரட்டி, வாணலியில் உள்ள வெண்ணெயில் போட்டு, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போல் அனைத்து மீன் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், பெங்காலி ஸ்பெஷல் மீன் ஃப்ரை ரெடி!!!

Related posts

எப்படி என்று பார்க்கலாம் ஹாங்காங் ஃப்ரைடு இறால்

nathan

பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு!!

nathan

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan

பட்டர் சிக்கன்

nathan

சுவையான ஃப்ரூட் சுண்டல்!….

sangika

ப்ரைடு சிக்கன்

nathan

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

சுவையான வாழைத்தண்டு பச்சடி எப்படிச் செய்வது?…

sangika