29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Chettinad Prawn Biryani 3
அசைவ வகைகள்

Prawn Briyani / இறால் பிரியாணி

தேவையான பொருட்கள் ; இறால் உரித்த பின்பு -அரைகிலோ ,
பாசுமதி அரிசி -அரைகிலோ,
எண்ணெய் – 100 மில்லி,நெய் – 50 மில்லி,
வெங்காயம்- 200 கிராம்,
தக்காளி -200 கிராம்,மிளகாய் -4,
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா (ஏலம் பட்டை கிராம்புத்தூள்)- அரைஸ்பூன் அதனுடன் சோம்புத்தூள் அரைஸ்பூன்,சீரகத்தூள் அரைஸ்பூன்,
மிள்காய்த்தூள் -1- 2 டீஸ்பூன்,
மல்லி,புதினா – கைபிடியளவு.
எலுமிச்சை-பாதி பழம்,
பிரியாணி இலை அல்லது ரம்பை இலை,
உப்பு- தேவைக்கு.
Chettinad+Prawn+Biryani+(3)
prawn 1
இறாலை சுத்தம் செய்து 5 தண்ணீர் விட்டு அலசி,உப்பு,மஞ்சள் போட்டு திரும்பவும் அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.பின்பு அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு,உப்பு,முக்கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து அரைமணி நேரம் வைக்கவும்.
prawn 2
மசாலா கலந்து வைத்த இறாலை ஒரு பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்.
prawn 3
பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்நது,வெங்காயம் சிவந்ததும்,இஞ்சிபூண்டு வதக்கி கரம்மசாலா,சீரகம்,சோம்பு பொடி சேர்த்து,வதக்கவும்.
prawn 4
வதங்கிய இஞ்சி பூண்டு கரம் மசாலா வகைகளுடன்,மல்லி புதினா ,மிள்காய் சேர்த்து வதக்கவும்.
prawn 5
பின்பு தக்காளி,முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி பின்பு சிறிது மூடி வைத்தால் தக்காளி மசிந்து எண்ணெய் மேலெழும்பி வரும்.
prawn 6
பிரியாணி மசாலா ரெடியானவுடன் ஊற வைத்த அரிசியை ஒன்றரை அளவு(காய்ந்த அரிசியாக இருந்தால் சிறிது தண்ணீர் அதிகம்

சேர்த்து )தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
prawn 7
அடுப்பை மீடியமாக வைக்கவும்.பின்பு வதக்கி வைத்த இறாலை பாதி வெந்து வந்த பிரியாணி சாதத்துடன் கலந்து பிரட்டி விடவும்.எலுமிச்சை பிழியவும்.மூடி விடவும்.சாதம் முக்கால் பதம் வெந்ததும் அடுப்பை குறைக்கவும்.
prawn 8
பிரியாணி பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி தம் போடவும்.அடிகனமான பாத்திரமாக இருக்க வேண்டும்.15 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
prawn f2
prawnbiryani
பிரியாணி பக்குவமாக வெந்து இருக்கும்.பிரட்டி சுடச்சுட பரிமாறவும்.சுவையான இறால் பிரியாணி ரெடி. விரும்பினால் ஸ்பிரிங் ஆனியன் கட் செய்து தூவியும் பரிமாறலாம்.

பின் குறிப்பு :இறாலுடன் தயிர்,எண்ணெய் ,மசாலா சேர்த்து பிரட்டி வைப்பதால் சஃப்டாக இருக்கும்.சில பேருக்கு இறால் ஒத்துக்கொள்ளாது அவ்ர்கள் இதில் சீரகம்,சோம்பு,தயிர்,எலுமிச்சை சேர்ப்பதால் தைரியாமாக சாப்பிடலாம்.வயிற்றுக்கு பிரச்சனை செய்யாது.இதுவே காரம் போதுமான அளவு இருக்கும்,விரும்பினால் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்.எப்பவும் இறால் வாங்கியதும் உரித்து உடனே சமைத்தால் ருசி அருமையாக இருக்கும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் வடித்து மிக்ஸ் செய்து தம் போட்டால் அதன் ருசியும் பிரமாதமாக இருக்கும்.நான் எப்பவும் வடித்து தான்
போடுவது வழக்கம்,சிலர் வடித்து செய்ய விரும்ப மாட்டார்கள்,அவர்களுக்காக இந்த முறையில் கொடுத்து இருக்கிறேன்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஸ்பேஷல் மட்டன் கிரேவி செய்வது எப்படி????

nathan

சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்…!​

nathan

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்

nathan

தனிச்சுவை கொண்ட கிராமத்து வஞ்சிர மீன் குழம்பு செய்ய…

nathan

இறால் சில்லி 65

nathan

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி

nathan

மட்டன் பிரியாணி

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika