23 1442999106 3 sunscreen
முகப் பராமரிப்பு

ஆலிவ் ஆயிலை சருமத்திற்கு பயன்படுத்தினால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

பலரும் ஆலிவ் ஆயில் சருமத்திற்கு நல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நல்லது தான். ஆனால் சிலருக்கு அந்த எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தினால் பிரச்சனைகள் எழக்கூடும் என்பது தெரியுமா? இதற்கு தற்போது மார்கெட்டில் கிடைக்கும் ஆலிவ் எண்ணெய்களில் கெமிக்கல்கள் கலந்திருப்பது தான். அதனால் சருமத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

நீங்கள் பயன்படுத்தும் ஆலிவ் எண்ணெயால் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனே அந்த எண்ணெய் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். மேலும் சுத்தமான ஆலிவ் எண்ணெயைத் தேடி கண்டுபிடித்து வாங்கிப் பயன்படுத்துங்கள். சரி, இப்போது கெமிக்கல் கலந்த ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போமா!!!

முகப்பரு

பிசுபிசுத்தன்மை அதிகம் கொண்ட ஆலிவ் ஆயிலை சருமத்திற்கு பயன்படுத்தினால், அது சருமத்தின் மேல் ஒரு படலத்தை உருவாக்கி, தூசிகள், இறந்த செல்கள் போன்றவற்றை தேக்கி பருக்களை உண்டாக்கும் என்ற கருத்து ஒன்று உள்ளது. அதிலும் கெமிக்கல் கலந்த ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தினால், பருக்கள் அதிகம் வர ஆரம்பிபித்துவிடும். இந்நிலையை நீங்கள் சந்தித்தால், அதனைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்.

அரிப்பு

சிலருக்கு ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்திய பின் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக எண்ணெய் பசை சருமத்தினர் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு இது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்திவிடும்.

அலர்ஜி

உங்களுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தி, சருமத்தில் ஆங்காங்கு சிவக்க ஆரம்பித்தால், அந்த எண்ணெய் பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். மேலும் தோல் நிபுணரை சந்தித்து ஆலோசனைப் பெறுங்கள்.

குழந்தைகளுக்கு வேண்டாம்

தற்போது எதிலும் கலப்படம் இருப்பதால், குழந்தைகளுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது மற்றும் சென்சிடிவ்வானது. அந்த சருமத்தில் கெமிக்கல் கலந்த ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தினால், உங்கள் குழந்தை தான் அவஸ்தைப்படும்.

வறட்சியான சருமத்திற்கு நல்லதல்ல

கெமிக்கல் கலந்த ஆலிவ் ஆயில் வறட்சியான சருமத்தினருக்கு அரிப்புக்களை ஏற்படுத்தி, நிலையை மேலும் மோசமாக்கும். மேலும் ஆய்வு ஒன்றில் ஆலிவ் ஆயிலில் உள்ள ஒலியிக் அமிலம், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை நீக்கி, சருமத்தை மேலும் வறட்சியடையச் செய்வதாக சொல்கிறது.

கரும்புள்ளிகள்

ஆலிவ் ஆயில் ஏற்கனவே மிகவும் பிசுபிசுத்தன்மை கொண்டது. இதனால் கரும்புள்ளிகள் வரக்கூடும். அத்தகைய எண்ணெயில் கெமிக்கல் கலந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாகச் செய்யும். எனவே கவனமாக இருங்கள்.

23 1442999106 3 sunscreen

Related posts

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ் (beauty tips in Tamil)

nathan

தேஜஸான முகம் பெற என்ன செய்ய வேண்டும்?

nathan

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா

nathan

முகத்துல சுருக்கமா? இந்த 3 குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க!!

nathan

உங்க முகம் அசிங்கமான கருமையிலிருந்து விடுபட வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்!

nathan

தங்க நாணயம் கொண்டு எப்படி ஜொலிக்கும் முகத்தை பெறலாம் எனத் தெரியுமா?

nathan

மஞ்சள் பேக் போடுவதால் அதிகரிக்கும் முக அழகை கவனித்துள்ளீர்களா?

nathan

அம்மைத் தழும்புகளை செலவும் இல்லாமல் மறையச் செய்துவிட முடியும்.

nathan

கண்களை சுற்றி கருவளையம் போக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan