பருப்பு வகைகளில் ஒன்றான கொள்ளு, உடலுக்கு மிகவும் நல்லது. அதனைக் கொண்டு கொள்ளு ரசம், கொள்ளு பொரியல், கொள்ளு மசியல் என்று செய்து சுவைக்கலாம். ஏற்கனவே நாம் கொள்ளு ரசத்தை எப்படி செய்வதென்று பார்த்துள்ளோம். இப்போது கொள்ளு மசியல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
குறிப்பாக குழந்தைகளுக்கு கொள்ளு கொடுத்து வந்தால், அவர்களின் உடல் வலிமை அதிகரிக்கும். சரி, இப்போது அந்த கொள்ளு மசியல் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி – 1 டீஸ்பூன்
தக்காளி – 2 (நறுக்கியது)
வரமிளகாய் – 4
பூண்டு – 5 பற்கள்
சின்ன வெங்காயம் – 10
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு லேசாக வறுத்து இறக்கி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் கொள்ளுவை கழுவி, குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், மல்லி, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கி, பின் அதில் வேக வைத்துள்ள கொள்ளு சேர்த்து, கொத்தமல்லி தூவி 2 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, முக்கால் பதத்தில் அரைத்தால், கொள்ளு மசியல் ரெடி!!!