03 1438601094 mealmaker vadai recipe
சிற்றுண்டி வகைகள்

மீல்மேக்கர் வடை

இதுவரை மீல்மேக்கரை பிரியாணியில் சேர்த்து சமைத்து சுவைத்திருப்பீர்கள். அதை தவிர மீல்மேக்கரை மசாலா செய்து ருசித்திருப்பீர்கள். ஆனால் மீல்மேக்கரைக் கொண்டு வடை செய்து சுவைத்ததுண்டா? ஆம், மீல்மேக்கரை வடை செய்து மாலை வேளையில் காபி அல்லது டீயுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மீல்மேக்கர் வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 1 கப்
கடலை மாவு – 1 கப்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மட்டன் மசாலா – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, வெட்டிக் கொள்ள வேண்டும்.

03 1438601094 mealmaker vadai recipe

பின் ஓர் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

அதற்குள் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைத் தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் மீல் மேக்கரை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

இறுதியில் இந்த கலவையை வடைகளாக தட்டி, அடுப்பில் உள்ள எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மீல்மேக்கர் வடை ரெடி!!!

Related posts

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் நட்ஸ் குக்கீஸ்

nathan

கறிவேப்பிலை வடை

nathan

பாசிப்பருப்பு வெஜ் ஊத்தப்பம்

nathan

சிறுதானிய வரிசையில் ஆரோக்கியம் தரும் கம்பு ரொட்டி

nathan

யுகாதி ஸ்பெஷல் தேங்காய் போளி

nathan

சுக்கா பேல்

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு தோசை

nathan

மிளகு பட்டர் துக்கடா

nathan