24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
சர்வதேச பெண்கள் தினம் ஏன் மார்ச் 8?
அழகு குறிப்புகள்

சர்வதேச பெண்கள் தினம் ஏன் மார்ச் 8?

எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றைப் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன! மார்ச் 8-ஆம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் முதலிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடியதைக் குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சுப் புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டிப் போராடினார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள உற்சாகம் கரைபுரள, கோஷங்கள் வானைப் பிளக்க, அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரெனக் கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளைக் கண்டிப்பாகப் பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந் திருந்தவர்களைச் சமாதானப் படுத்தினான்.அது இயலாமல் போகவே, அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவியது. அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட, ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் நாளாகும்! அந்த மார்ச் 8-ஆம் நாள்தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியால் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டது.

அதன்பின் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது. 1910 இல் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடி பெண்கள் தினத்தைச் சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்பின் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.1911 மார்ச் 19-இல் முதல் சர்வதேசப் பெண்கள் தினம் லட்சக்கணக்கானப் பெண்கள் அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்குச் சென்ற இடத்தில் கருகி இறந்தனர். இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன. 1917-இல் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் பலியானார்கள். அந்தச் சமயத்தில் ரொட்டிக்காகவும், அமைதிக்காகவும் பெண்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பெண்கள் தினத்தன்று பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி அது பிப்ரவரி 23. ஆனால், உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ஆம் நாள். ஆகவேதான் மார்ச் 8 இல் பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.. ஐ.நா.-வும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் சமத்துவக் கோரிக்கைகளுக்காகவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-இல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி, பெண்களுக்கு சம உரிமை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேசக் கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உழைத்தது.

1975-ஆம் ஆண்டை சர்வதேசப் பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 1977-இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சர்வதேசப் பெண்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில், உள்ளன்போடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளரத் தொடங்கின. பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சட்ட நடவடிக்கைகள், பொதுக்கருத்து உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி, ஆராய்ச்சி என நான்கு வழிகளில் வழிகாட்டி, முயற்சியும் செய்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடர்ந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்கள் எனவும் முண்டாசுக் கவிஞன் பாரதி முழங்கினான். இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும்! சில செய்திகள்!

உலகில் உள்ள ஏறத்தாழ 3 கோடி அகதிகளில் 80 முதல் 85 சதவிகிதத்தினர் பெண்கள். தினமும் பிரசவத்தின் போது 1,600 பெண்கள் மரணமடைகிறார்கள். ஸ்வீடன், கனடா, நார்வே, அமெரிக்கா, பின்லாந்துப் பெண்கள் ஆயுள், கல்வி, வருமானம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடுகளில் முதன்மை பெறுவது நியூசிலாந்து. 1893-ஆம் ஆண்டிலிருந்து அங்கு பெண்கள் ஓட்டளித்து வருகிறார்கள்.

இதுவரை உலகில் 28 பெண்களே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தியுள்ளனர். சர்வதேச நாடாளுமன்றங்களில் இதுவரை 14.1 சதவீதத்துக்கு மேல் பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள். ஸ்வீடனில் 1995-இல் அமைச்சரவையில் பெண்கள் சமவிகிதத்தில் இடம் பெற்றனர். அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் எதிர்கொள்ளும் சவால்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்!62

Related posts

கன்னத்தின் அழகு அதிகரிக்க……

nathan

இதோ ஈஸியான டிப்ஸ். முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென மாறவேண்டுமா?

nathan

2022 இல் இந்த 6 ராசிக்கும் திருமணம் நடக்கும் அதிர்ஷ்டம் இருக்காம்…

nathan

பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க…..

sangika

beauty tips.. முகச் சுருக்கம் நீங்கி இளமை தோற்றத்துடன் ஜொலிக்க ஜப்பான் பெண்கள் பயன்படுத்தும் அற்புத மருத்துவம்..

nathan

பூனை முடி உதிர…

nathan

நம்ப முடியலையே…பிரபல நடிகை அசின் மகளா இது?? அழகில் அம்மாவை மிஞ்சிய மகள்!!

nathan

Homemade Face Mask-Pack For Brightening/Whitening And Glowing Skin

nathan

அடேங்கப்பா! யூடியூப்பில் கலக்கிய அராத்தி பூர்ணிமா ரவியா இது? நம்ப முடியலையே…

nathan