25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
19 1455867528 7 sandal face mask
முகப் பராமரிப்பு

முகத்தில் கருப்பு கருப்பா இருக்கா? அதை நீக்க இதோ சில வழிகள்!

ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இவைகள் முகத்தை பொலிவற்றதாக வெளிக்காட்டுவதோடு, முதுமைத் தோற்றத்துடனும் காண்பிக்கும். இவற்றை எளிமையான சில இயற்கை வழிகளின் மூலம் போக்க முடியும்.

பொதுவாக இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏற்படும்.

இங்கு அவற்றைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், விரைவில் அவற்றை மறைக்கலாம்.

கற்றாழை ஜெல் பேக்

கற்றாழை ஜெல்லை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் உள்ள கருமை முற்றிலும் அகலும்.

தயிர் பேக்

முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிரை சேர்த்து நன்கு அடித்து, அவற்றை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்.

வெந்தயக்கீரை பேக்

வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

எலுமிச்சை பேக்

எலுமிச்சை ஓர் சிறந்த ப்ளீச்சிங் தன்மை நிறைந்த பொருள். அந்த எலுமிச்சை சாற்றினை 1/2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேனை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வர, முகத்தின் பொலிவு மேம்படும்.

வெங்காயம் மற்றும் பூண்டு

வெங்காயம் மற்றும் பூண்டை சரிசமமாக எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ, முகத்தில் இருக்கும் கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகள் மறையும்.

சந்தன பேக்

சந்தனம் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து, பொலிவோடு வெளிக்காட்டும். அதற்கு ஒரு பௌலில் சந்தனப் பொடியை சிறிது போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், உங்கள் முகத்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

19 1455867528 7 sandal face mask

Related posts

அழகாய் இருக்கா தினமும் பத்து நிமிடம் செலவழிச்சால் போதும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை வேகமாக மறைப்பது எப்படி?

nathan

முகம் பளபளப்பாக இருக்க சிறந்த டிப்ஸ்!….

sangika

முகப்பருவை மறைக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தி விடுங்க!இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

மூக்கின் மீது உள்ள கரும்புள்ளிகளை விரட்டியடிக்கும் ஒரு ஒரு இயற்கை பொருள்!

nathan

காலையில் எழுந்ததும் இவற்றை செய்து பாருங்கள்!….

sangika

சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள்

sangika

எலுமிச்சை சாற்றினை முகத்திற்குப் பயன்படுத்தலாமா?

nathan

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்

nathan