29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld3632
தலைமுடி சிகிச்சை

கூந்தல் எப்போது பாதிப்படைகிறது?

கூந்தல்: வி.லஷ்மி,

கெமிக்கல் ஹேர் டை Vs இயற்கை சாயம் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேலான அறிகுறிகளைக் காட்டினால் உங்கள் கூந்தல் பாதிக்கப்பட்டிருக்கிறது… ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்.

* முரட்டுக் கூந்தல்
* வறண்டு, உடைந்திருத்தல்
* சுலபமாக உடைந்து போவது
* மீள் தன்மையே இல்லாதது
* கூந்தல் சாயமானது சீக்கிரமே

நீங்குவது அல்லது அதிக சாயத்தை உறிஞ்சிக் கொள்வதுகூந்தலை ப்ளோ டிரையிங் செய்வது, கடுமையான காற்று, ஸ்ட்ராங்கான ஷாம்பு மற்றும் கூந்தலுக்கு செய்து கொள்கிற கெமிக்கல் சிகிச்சைகள் என எல்லாமே கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஸ்ட்ரெயிட்டனிங், வேவிங், பெர்மிங் போன்ற எந்த சிகிச்சையும் கூந்தலை பாதிக்கக்கூடியவையே. எனவே இம்மாதிரி சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு முன்பும் பின்பும் ரீகண்டிஷனிங் சிகிச்சைகள் செய்துகொள்ளப்பட வேண்டியது அவசியம்.

இந்த சிகிச்சைகளைவிட, அடிக்கடிகூந்தலுக்கு சாயம் பூசுவதால், அதன் ஆரோக்கியம் கெட்டுப் போகிற பிரச்னை பரவலாக பலருக்கும் இருக்கிறது. அப்படியென்றால் அதற்கு என்னதான் தீர்வு? கெமிக்கல் டை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நரையை எப்படி மறைக்கலாம்? இயற்கையான சாயத்துக்குத் திரும்புவதுதான் ஒரே வழி.

அந்தக் காலங்களில் எல்லாம் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கூந்தல் சாயங்களைத்தான் பயன்படுத்தினார்கள். அவற்றில் முதலிடம் ஹென்னா என்கிற மருதாணிக்கு. இதை உபயோகிப்பதன் மூலம் கூந்தல் அடர் சிவப்பு நிறம் பெறும். அது பலமுறை தலைக்குக் குளித்த பிறகுகூட நீடிக்கும். ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்னை இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. கூந்தல் முழுக்க நரைத்து வெண்மையாக மாறியவர்கள், ஹென்னா உபயோகிக்கக்கூடாது. அது கூந்தலை ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றி விடும். சால்ட் அண்ட் பெப்பர் லுக் எனப்படுகிற பாதி நரைத்த கூந்தலுக்குதான் இதை உபயோகிக்கலாம். ஹென்னாவை உபயோகித்து அவரவர் விருப்பப்படி வேறு வேறு கூந்தல் ஷேடுகளை பெற முடியும்.

சிவப்பும் பிரவுனும் கலந்த ஷேடுக்கு…

மருதாணிப்பொடி – 1 பங்கு, பட்டைத் தூள் – அரை பங்கு, சூடான காபி டிகாக்‌ஷன்- ஹென்னாவை கலக்கும் அளவுக்கு, திராட்சைச் சாறு – அரை கப், எலுமிச்சைச் சாறு 1 பங்கு, ஆப்பிள் சிடர் வினிகர் – அரை பங்கு, முட்டை (விரும்பினால்) – 1, தயிர் – 2 முதல் 4 டேபிள்ஸ்பூன்.

கலவை முறை

ஹென்னா, பட்டைத்தூள், திராட்சைச் சாறு, காபி டிகாக்‌ஷன் இந்த நான்கை யும் ஓரளவு கெட்டியாகக் கலந்து சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு எலுமிச்சைச்சாறும், வினிகரும் சேர்த்து நன்கு கலக்கவும். இதை 6 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். முட்டையையும் தயிரையும் ஒன்றாகக் கலந்து, ஹென்னா கலவையுடன் சேர்த்து உடனடியாக தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்கவும்.

டார்க் பிரவுன் ஷேடுக்கு…

மருதாணிப் பொடி – 1 பங்கு, பட்டைத் தூள் – அரை பங்கு, சூடான காபி டிகாக்‌ஷன்- ஹென்னாவை கலக்கும் அளவுக்கு, எலுமிச்சைச்சாறு – 1 பங்கு, ஆப்பிள் சிடர் வினிகர் – அரை பங்கு, முட்டை (விரும்பினால்)- 1, தயிர் – 2 முதல் 4 டேபிள்
ஸ்பூன், அவுரி தூள் – அரை பங்கு.

கலவை முறை

ஹென்னா, பட்டைத்தூள், காபி டிகாக்‌ஷன் மூன்றையும் ஓரளவு கெட்டியாகக் கலந்து சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு எலுமிச்சைச்சாறும், வினிகரும் சேர்த்து நன்கு கலக்கவும். இதை 6 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். பிறகு அவுரி தூளில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, ஹென்னா கலவையுடன் சேர்க்கவும். இத்துடன் முட்டையையும் தயிரையும் ஒன்றாகக் கலந்து, உபயோகிக்கவும்.

கருப்பு ஷேடுக்கு…

மருதாணிப்பொடி – 1 பங்கு, சூடான காபி டிகாக்‌ஷன்- ஹென்னாவை கலக்கும் அளவுக்கு, எலுமிச்சைச்சாறு – 1 பங்கு, ஆப்பிள் சிடர் வினிகர் – அரை பங்கு, முட்டை – 1, இயற்கையாகத் தோய்த்த தயிர் – 4 டேபிள்ஸ்பூன், அவுரி தூள் – அரை பங்கு.

கலவை முறை

மருதாணிப் பொடியையும் காபி டிகாக்‌ஷனையும் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்து ஆற வைக்கவும். ஆறியதும் எலுமிச்சைச் சாறும், வினிகரும் சேர்த்து 6 மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். முட்டையையும் தயிரையும் ஒன்றாகக் கலந்து, ஹென்னா கலவையுடன் சேர்த்து தலையில் தடவவும். 2 முதல் 3 மணி நேரம் அப்படியே ஊறவிடவும். அவுரி தூளை சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் கரைக்கவும். தலையை நன்கு அலசிக் காய வைக்கவும். பிறகு தயாராக உள்ள அவுரி கலவையை ஹென்னா மாதிரியே மறுபடி தலையில் தடவவும். இதை 2 மணி நேரம் வைத்திருந்து அலசவும். இந்த முறையில் கூந்தலுக்கு இயற்கையான கருமை நிறமும் கிடைக்கும். கெமிக்கல் கலந்த டை வகையறாக்கள் ஏற்படுத்தும் அலர்ஜியில் இருந்தும் கூந்தலைக் காப்பாற்றலாம்.

கலரிங் செய்வதை எப்போது தவிர்க்க வேண்டும்?

ஹேர் ஸ்பிரே, ஸ்டைலிங் பொருட்கள் மற்றும் சில வகையான கண்டிஷனர்கள் கூந்தலின் மேல் ஒருவித படிவத்தைப் படிய விடுவதால், கூந்தலில் பூசுகிற சாயம் சரியாக ஒட்டாமல் போகும். கூந்தல் ரொம்பவும் வறண்டு, தேங்காய் நார் போல முரடாக இருந்தாலோ, உடைந்தாலோ, உயிரே இல்லாமல் இருந்தாலோ கலரிங் போன்ற கெமிக்கல் சிகிச்சைகளின் போது பாதிப்புகளைக் காட்டலாம். எனவே கலரிங் செய்வதற்கு முன் உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உங்களுக்கான கூந்தல் கலரை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?

இதென்ன கேள்வி… கருப்புதானே எல்லோருக்கும் பிடிச்ச கலர்?’ எனக் கேட்கலாம். அதில் மறைந்திருக்கிற ஒரு பயங்கர உண்மையை கலரிங் செய்து கொள்கிற யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கூந்தலுக்கு அடித்துக் கொள்கிற கலருக்கும், சரும நிறத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ரொம்பவும் டார்க் கலரில் சாயம் பூசிக் கொள்கிறவர்களின் சருமம் வெளுத்து, ஆரோக்கியமற்ற தோற்றத்தைத் தரும். அதனால், கருமை நிறக் கூந்தல் கொண்டவர்கள் எப்போதும் ஒரு ஷேடு லைட்டான கலரை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. அதே போல செம்பட்டையான கூந்தல் உடையவர்கள், ஒரு ஷேடு டார்க் கலரை உபயோகிக்கலாம்.

உங்கள் ஹேர் கலரானது பாதுகாப்பானதாக, நீண்ட நாள் நீடிப்பதாக, கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதிக்காததாக இருக்க பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.

கலரிங்கை அதன் பாக்கெட்டில் கொடுத்துள்ள குறிப்புகளின் படி சரியான அளவில் கலக்க வேண்டும். நீங்கள் செய்யப் போகிற கெமிக்கல் சிகிச்சைக்கு உங்கள் கூந்தலைத் தயார்படுத்த, முன்கூட்டியே ரீ கண்டிஷனிங் சிகிச்சையை செய்ய வேண்டும். தரமான கலரிங்கையே உபயோகிக்க வேண்டும்.

உங்கள் கூந்தல் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், ப்ரீ கண்டிஷன் சிகிச்சையை செய்து கொண்டபிறகு கலரிங் செய்யலாம். இதன் மூலம் கூந்தலுக்குத் தேவையான புரதம், எண்ணெய் பசை மற்றும் ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.

கண்டிஷனிங் செய்த பிறகும் உங்கள் கூந்தலில் எந்த முன்னேற்றமும் இல்லாவிட்டால், ட்ரைகாலஜிஸ்ட் ஆலோசனையின் பேரில் அதை சகஜநிலைக்குக் கொண்டு வருகிற வரை, மேற்கொண்டு கலரிங் செய்வதைத் தவிர்க்கவும்.ld3632

Related posts

முடி உதிர்வு பிரச்சனையா? உடனடி நிவாரணத்திற்கு வீட்டு வைத்தியம்….

nathan

தலை அரிப்பை போக்குவது எப்படி போக்குவது எப்படி தெரியுமா?

nathan

அழகான, நீண்ட கூந்தலை பெற சில எளியவழிமுறைகள்!….

nathan

சூரியனிடமிருந்து கூந்தலை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?

nathan

இதோ எளிய நிவாரணம்! நரைமுடிக்கு ‘குட்-பை’ சொல்ல 5 நல்ல இயற்கை வழிகள்!!

nathan

ஹேர்பேக் வாரத்தில் தொடர்ந்து 2 முறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

nathan

நீங்கள் Hair style செய்து கொள்வதற்கு முன் இதைப் படியுங்கள்..

nathan

திடீர் கூந்தல் உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்

nathan

உங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan