கண்ணுக்குக் கீழே கருவளையம் நீங்க என்ன செய்வது?
சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்புவளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்து கண்களுக்கு கீழே பூச வேண்டும். பன்னீரில் துணியை நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
துண்டு வெள்ளரிக்காயில், அரைடீஸ்பூன் உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரைக்க வேண்டும். கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் கருவளையம் நீங்கிவிடும். திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்கமுடியும்.
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக் கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
முகத்தில் வளரும் தேவையற்ற முடி நீங்க வழி என்ன?
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். குப்பை மேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும்.
சுருக்கமில்லாத முகம் பெற வழி என்ன?
எலுமிச்சம் பழத்தோலை காயவைத்து பொடித்து பன்னீரில் கலந்து தயிர், முள்ளங்கி சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியதும் கழுவினால் முகம் பளபளப்பாகும். முகத்தில் உள்ள சுருக்கம் மறையும். தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக்குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் சருமம் மிருதுவாகும். நல்ல பலன் கிடைக்கும்.