25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF e1457016790545
இனிப்பு வகைகள்

உருளைக்கிழங்கு ஜிலேபி

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு : 1/2 கிலோ
தயிர் : 1 கப்
ஆரோரூட் பவுடர் : 50 கிராம்
எலுமிச்சம்பழம் : 1 சிறிது
நெய் : 1/2 கிலோ
சர்க்கரை : 1/4 கிலோ
கு‌ங்கும‌ப் பூ – ‌சி‌றிது

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து, பாகாகக் கொதித்து வரும். பாகு இருகி வரும்போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும்.

எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சாறை தனியாக வைத்துக் கொள்ளவும். வெள்ளைத் துணியின் நடுவில் ஒரு சிறு துவாரம் செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை ‌வி‌ட்டு காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை, துவாரம் செய்துள்ள துணிக்குள் வைத்து, முறுக்கு பிழிவது போல வட்டமாகப் பிழிய வேண்டும்.

முறுக்கின் இருபுறமும் சிவக்க வெந்து எடுத்து, தனியாக வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும். பாகில் நன்றாக ஊறியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். உருளைக்கிழங்கு ஜிலேபி ரெடி.
%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF e1457016790545

Related posts

அன்னாசி – வெந்தயப் பணியாரம்

nathan

உளு‌ந்து ல‌ட்டு

nathan

வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி..?

nathan

பயற்றம் உருண்டை// பயற்றம் பணியாரம்..

nathan

பாதாம் அல்வா செய்முறை

nathan

இனிப்பு சோமாஸ்

nathan

அதிரசம், முறுக்கு.. தேங்காய் பூ லட்டும், பளபள பாயசமும்.. ரெசிப்பி கார்னர்

nathan

தொதல் – 50 துண்டுகள்

nathan

பூசணி விதை பாதாம் பர்பி

nathan