தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் – அரை கப்
தனியா – ஒரு கப்
துவரம் பருப்பு – கால் கப்
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
வெந்தயம் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 இனுக்கு
பச்சரிசி – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
செய்முறை :
தேவையான பொருட்களை தயாராக அளந்து வைக்கவும்.
தனியாவை சிவக்க வறுக்கவும்.
காய்ந்த மிளகாயை சிறுதீயில் வறுக்கவும்.
மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை வறுக்கவும்.
துவரம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
கடலை பருப்பு, உளுந்து, பச்சரிசி சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை நன்கு சூடு போக ஆற விடவும்.
பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து அவரவர் தேவைக்கு ஏற்ற பதத்தில் திரிக்கவும். மணமான சாம்பார் பொடி தயார்
தயாரிப்பு : ..
குறிப்பு :
கட்டி பெருங்காயம் சேர்ப்பவர்கள் ஒரு சிறு நெல்லியளவு சேர்க்கவும். விரல் மஞ்சள் இருப்பின் 2 இன்ச் சேர்க்கவும். இவற்றையும் லேசாக வறுத்து அரைக்கவும். மேலும் காரம், நிறம் வேண்டுபவர்கள் தனி மிளகாய் தூள் வறுக்காமல், பொடியுடன் அவரவர் காரத்திற்கு ஏற்ப ஒரு சுற்று சுற்றி எடுக்கலாம். நன்கு ஆற வைத்து அரைப்பதால் ஈரம் கோர்க்காமல் நீண்ட நாட்கள் வரும்.