27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
Sandool
சரும பராமரிப்பு

சிவப்பு சந்தனத்தின் நன்மைகள்

சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

• உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தனம் சிறப்பாக செய்யும்.

எனவே 1-2 தே.கசிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.

• உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துங்கள்.

அதற்கு ஒரு பௌலில் 2 மே.க தயிர் அல்லது பாலை ஊற்றி, அதில் 1 மே.க சிவப்பு சந்தனப் பொடி மற்றும் 1/2 தே.க மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

• பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம்.

அதற்கு 4 மே.க தேங்காய் பாலில், 2 தே.க பாதாம் எண்ணெய் மற்றும் 4 தே.க சந்தனப் பொடி சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.

• சிவப்பு சந்தனம் சருமத்தில் சொரசொரவென்று இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.

அதற்கு ஒரு மே.க சிவப்பு சந்தனத்தை 2 மே.க மசித்த பப்பாளியுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

• சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் அந்த எண்ணெய் பசையை நீக்க, 1 மே.க சிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.

• வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தனம் உதவும்.

அதற்கு தினமும் 2 மே.க சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

• சிலர் முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் சிவப்பு சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வர, அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

• சிலருக்கு இளமையிலேயே சருமம் ஒருவித சுருக்கத்துடன் காணப்படும். இதனைத் தடுக்க சிவப்பு சந்தனம் உதவும்.

அதற்கு 4 தே.க சிவப்பு சந்தனப் பொடியில் 2 தே.க சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி ஊற வைத்து கழுவ சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
Sandool

Related posts

அழகிய கழுத்து கிடைக்க 5 ஈஸி டிப்ஸ் !!

nathan

பளபள தோலுக்கு பாதாம்

nathan

முதுகு அழகை பராமரிக்க ஸ்க்ரப் செய்யலாம்

nathan

அக்குள் கருமையை மறைய செய்யும் சர்க்கரை–அழகு குறிப்புகள்!

nathan

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? அப்போ இத செய்யுங்கள்!…

sangika

ஃபிஷ் ஸ்பா அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்

nathan

குளிர்ச்சி குளியல்

nathan

சருமத்தை அழகாக்கும் பேபி ஆயில்

nathan

சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் விஷயங்கள், Tamil Beauty Tips

nathan