சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலைமாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கருப்பான சருமம் களையாகும்.
ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதிதைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம்பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்யவும். மசாஜு க்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்துபேக்போடவேண்டும். இதனால் முகம் நிச்சயம் பொலிவாகும்.
லாக்ஷாதி தைலம், ஏலாதி தைலம், குங்குமாதி தைலம் என ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கலந்து காய்ச்சப்பட்ட எண்ணெயைக்கொண்டு முகத்துக்கு ஆயில் மசாஜ் செய்யவேண்டும். நல்லெண்ணெயும் நல்ல பலன் தரும். தினமும் 10 நிமிடங்கள் இப்படி மசாஜ் செய்துவந்தால், ஒட்டிய கன்னம் உப்பும். கண்ணைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் மறையும். இளமையாக இருக்கவைக்கும்.
நின்றபடி நாமே செய்துகொள்வதைவிட படுத்துக்கொண்டு, இன்னொருவர் மசாஜ் செய்தால் எண்ணெய் சருமத்தினுள் நன்கு ஊடுருவும். வறண்ட சருமத்தை வழுவழுப்பாக்கும். ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பொலிவுகூடும். முகத்தில் கருமை, திட்டுக்கள் நீங்கும்.
வெயிலில் டூவீலரில் செல்கிறபோது சன்ஸ்கிரீன் உபயோகிக்கலாம். அதேபோல் கைகளுக்கு கிளவுஸ் அணிவது சருமத்தை பாதுகாக்கும்.