27.5 C
Chennai
Sunday, Aug 17, 2025
ஃபேஷன்அலங்காரம்

இன்றைய பெண்கள் விரும்பும் பிராண்டட் நகைகள்

jewellery_trends_for_eidமக்களின் ரசனை அவ்வப்போது மாறிவருவது இயற்கையே அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அழகுணர்ச்சியும் அதிகம் இருப்பதால் புதுப்புது விஷயங்களை வரவேற்பதில் முதன்மையாக இருப்பர். பெண்கள் தாங்கள் அணியும் நகைகளில் இந்த மாறுதல்களையும் புதுமைகளையும் அதிகமாய் வரவேற்பதால் தான் ஆபரண தொழில்நுட்பத்திலும் பல்வேறு வளர்ச்சிகளை காண முடிகிறது.
இன்றைய ஆபரண தொழில் நுட்பம் மூலம் கனிணிகளை பயன்படுத்தி பல புதிய டிசைன்களை வடிவமைக்கின்றனர். அழகிய நுணுக்கமான வேலைப்பாடு நிறைந்த நகைகள் அந்தந்த நிறுவனங்களின் பிராண்ட் பெயர்களுடன் பிரபலமாகி வருகிறது.
இப்படி தயாரிக்கப்படும் நகைகளில் பலவும் பழைய கலை நயத்துடன் இன்றைய நவீன கலைநுட்பத்துடன் சேர்ந்து பிரமிப்பான அழகிய வடிவங்களை பெற்று ஜொலிக்கின்றன. இன்றைய பெண்களுக்கு ஏற்ற வித்தியாசமான பல டிசைன்கள் 18 காரட் தங்கத்தில் எடுப்பான சிறுசிறு வைரங்கள் பதிக்கப்ட்டு நேர்த்தியாகவும், மெல்லியதாகவும் செய்யப்படுகின்றன.

18 காரட் என்பதால் மின் நுணுக்கமான மெல்லிய நகையாக இருந்தாலும் அது சீக்கிரமாக அறுந்து விடுவதோ, வளைந்து விடுவதோ இல்லை. மேலும் இவற்றில் ஜொலிக்கும் வைரங்கள் பதிக்கப்படுவதால் சிறியதாக இருந்தாலும் ஜொலிப்பாகவும் பார்த்தால் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கின்றன.
ஒருவரின் வயது, உயரம் மற்றும் தோற்றத்தை கருத்தில் கொண்டு நகைகளை தேர்வு செய்வது இன்றைய பெண்களின் ரசனையாக உள்ளது. இளம் பெண்கள் பொதுவாக சிறிய ஸ்டட்கள், சிறு கற்கள் பதித்த நகைகள், மெல்லிய சங்கிளி கொண்ட சிறு பென்டென்ட்களையே விரும்புகின்றனர்.
கல்லூரி பெண்கள் மெல்லிய மோதிரங்களை எல்லா விரல்களிலும் அணிந்து கொள்வதையும், மெல்லிய ப்ரேஸ்லெட்டுகளை ஒன்றுக்கு மேற்பட்டு கைகளில் அணிந்து கொள்வதையும் விரும்புகின்றனர்.

Related posts

பெண்களை கவரும் கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்

nathan

அழகு குறிப்புகள்:முதன்முறையா மேக்கப்!

nathan

பெண்கள் நளினமாகப் புடவை கட்ட ஆலோசனைகள் !

nathan

கண் ஒப்பனை

nathan

திருமணத்தன்று அழகாக ஜொலிப்பதற்கான சில டிப்ஸ்….

nathan

இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் …..

sangika

அழகு படுத்துவதற்கான எளிய குறிப்புகள் (Skin Care Tips In Tamil)

nathan

பெண் குழந்தைகளுக்கு புதிய பெஸன்!

sangika

ஆடை பராமரிப்பு… `ஆல் இன் ஆல்…ஒரு டஜன் யோசனைகள்!

nathan