தேவையான பொருட்கள் :
அரிசி – 1 கப்,
பீர்க்கங்காய் – 2,
இஞ்சி – சிறு துண்டு,
பச்சை மிளகாய் – 6,
கடைந்த மோர் – கால் கப்,
துருவிய தேங்காய் – சிறிதளவு,
தனியா தூள் – 1 ஸ்பூன்,
சீரகத் தூள் – கால் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 2 கைப்பிடி அளவு
கொத்துமல்லி தழை – அலங்கரிக்க,
சிறிதளவு கடுகு – தாளிப்பதற்கு.
செய்முறை :
• கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• பீர்க்கங்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
• அரிசியைக் கழுவி கால் மணி நேரம் ஊறவிடவும்.
• குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
• அதோடு நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். 8 அதில், சீரகத் தூள், தனியா தூள், அரிசி சேர்த்து 2 நிமிடம் கலந்து விடவும்.
• 1 1/2 கப் தண்ணீர், மோர், உப்பு, கொத்தமல்லித் தழை, தேங்காய் துருவல் சேர்த்து மூடி 2 விசில் விடவும்.
• பச்சை நிறத்துடன் வித்தியாசமான ருசியுடன் கூடிய பீர்க்கங்காய் புலாவ் ரெடி.