தொலைக்காட்சி தொகுப்பாளரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான அர்ச்சனா, சில நாட்களுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக ஒரு பேட்டியில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி மற்றும் ஜீ டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய அர்ச்சனா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில், ‘‘இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை உங்களிடம் சொல்லப் போகிறேன்’’ என்று கூறியதோடு, ‘‘ஒரு மாதத்துக்கு முன்பே நானும் என் கணவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம்’’ என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பிறகு, என் மகள் சாரா,’நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியதை அடுத்து, இப்போது 20 வருடங்களுக்கு முன்பு காதலித்த மாதிரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அர்ச்சனாவின் கணவர், பினீத் ராணுவத்தில் பணிபுரிவதால், அர்ச்சனா தொகுப்பாளியானாக இருப்பதால், இருவரும் வெவ்வேறு துறைகளில் இருந்ததாகவும், பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.