29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sunsamayal.com %E0%AE%95%E0%AE%9A%E0%AE%B0 %E0%AE%90%E0%AE%B8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE
ஐஸ்க்ரீம் வகைகள்

பிஸ்தா ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

பால் – 3 கப்,
சர்க்கரை – முக்கால் கப்,
கார்ன்ஃப்ளார் – 5 டேபிள்ஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் – கால் டீஸ்பூன்,
யெல்லோ + க்ரீன் கலர் – ஒரு சிட்டிகை,
க்ரீம் – ஒரு கப்
பிஸ்தா பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?

பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ச்சவும். 5 நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். சர்க்கரையையும் சேர்த்து கரையும் வரை கொதிக்கவிட்டு, அடுப்பில் வைத்து இறக்கி நன்றாக ஆறவிடவும். எசன்ஸும் கலரும் சேர்க்கவும். இந்தக் கலவையை, முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக அடித்து,க்ரீமை சேர்க்கவும். பிறகு இந்தக் கலவையை ஃப்ரீஸரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, வெளியே எடுத்து மறுபடியும் ‘பீட்’ செய்யவும். உடைத்த பிஸ்தா பருப்புகளை சேர்க்கவும்.ஐஸ் ட்ரேயில் கொட்டி, பிளாஸ்டிக் ஷீட்டால் நன்றாக மூடி, ஃப்ரீஸரில் வைக்கவும்.sunsamayal.com %E0%AE%95%E0%AE%9A%E0%AE%B0 %E0%AE%90%E0%AE%B8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE

Related posts

பிரெட் ஐஸ்கிரீம்

nathan

சுவையான ஃபுரூட் சாலட்

nathan

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

nathan

காரமல் கஸ்டெர்ட் (caramel custard)

nathan

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

nathan

பட்டர் புட்டிங்

nathan

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

nathan

சுவையான மாம்பழ பிர்னி

nathan