25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld3647
கண்கள் பராமரிப்பு

கண்ணை என்ன செய்யலாம்?

கண்களுக்கான மேக்கப் சாதனங்களைத் தேர்வு செய்வதற்கு முன் உங்கள் சருமத்தின் தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சாதாரண சருமமா, வறண்ட சருமமா, எண்ணெய் பசை சருமமா, காம்பினேஷன் சருமமா எனப் பார்க்க வேண்டும்.வறண்ட சருமம் கொண்டவர்களும், சருமத்தில் சுருக்கங்கள் உள்ளவர்களும் க்ரீம் வடிவிலான ஐ ஷேடோ மற்றும் ஐ லைனர்களை உபயோகிக்கலாம். அது அவர்களது சருமத்தை மென்மையாகக் காட்டும்.

எண்ணெய் பசையான மற்றும் காம்பினேஷன் சருமம் கொண்டவர்கள் லிக்யூட் மேக்கப்புக்கான கண் அழகு சாதனங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ரொம்பவும் எண்ணெய் வழிகிற சருமம் என்றால் மேட் ஃபினிஷ் ஐ மேக்கப் சாதனங்களை உபயோகிக்கலாம். இது எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும். தவறான ஐ மேக்கப் சாதனங்களை உபயோகித்தால் கண்களின் அழகு மட்டும் கெட்டுப் போவதில்லை. மொத்த முக அழகுமே மாறிப் போகும்.

ஐ பென்சில்

சிலருக்கு புருவங்கள் மிக மெலிதாக, அடர்த்தியின்றி இருக்கும். அவர்கள் ஐ ஷேடோ மாதிரியான ஐ பென்சில் உபயோகித்து புருவங்களை அடர்த்தியாகக் காட்டலாம். ரொம்பவும் அடர்த்தியான புருவங்கள் கொண்டவர்கள் கருப்பு அல்லது பிரவுன் நிற ஐ பென்சில் உபயோகிக்கலாம்.

கண்களுக்கான அழகு சாதனங்களைத் தேர்வு செய்யும் போது கூடியவரையில் பிரபலமான, தரமான பிராண்டுகளையே வாங்கவும். தரமற்ற ஐ மேக்கப் சாதனங்கள், மிகச் சுலபமாக உங்கள் கண்களில் இன்ஃபெக்‌ஷனை ஏற்படுத்தி, அதன் விளைவாக கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை உருவாக்கும். கண்களுக்கு வாட்டர் ப்ரூஃப் ஐ மேக்கப் உபயோகிக்கும் போது ஐ மேக்கப் ரிமூவர் உபயோகிக்க வேண்டியது மிக மிக முக்கியம். இது லிக்யுட் மற்றும் ஜெல் வடிவில் கிடைக்கிறது. எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்கள் ஜெல் ஐ மேக்கப் ரிமூவரையும் மற்றவர்கள் லிக்யுட் ரிமூவரையும் உபயோகிக்கலாம். இரண்டுமே பிரபல பிராண்டுகளில் கிடைக்கின்றன.

ஐ ஷேடோ

ஐ ஷேடோ தேர்வு செய்யும் போது உடையின் நிறம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். மெரூனும் கோல்டும், சில்வரும் ப்ளூவும், கருப்பும் ப்ளூவும் சிறந்த காம்பினேஷன்கள். தென்னிந்தியப் பெண்களின் மாநிறத்துக்கு டார்க் ஷேடு ஐ ஷேடோக்கள் பொருத்தமாக இருக்கும். இந்த டார்க் ஷேடுகளுடன் கோல்டு அல்லது சில்வர் ஷிம்மர் கொஞ்சம் கலந்து உபயோகித்தால் கண்கள் இன்னும் பிரகாசமாக, அழகாகத் தெரியும்.

ஐ லைனர்

கண்கள் அழகாகத் தெரிய வேண்டும்… அவ்வளவுதான் என நினைத்தால் பென்சில் ஐ லைனர் உபயோகிக்கலாம். இது வாட்டர் ப்ரூஃபிலும் கிடைக்கிறது.அழகாகத் தெரிவதோடு, சம்திங் ஸ்பெஷலாகவும் தெரிய வேண்டும் என்றால் லிக்யுட் லைனர் உபயோகிக்கலாம். இதை வரைந்து பழகுவது சற்றே சிரமமானதுதான் என்றாலும் பழகிவிட்டால் கண்களின் அழகு உங்கள் கைவசம்!சம்திங் ஸ்பெஷல் மட்டுமின்றி, மற்றவர் பார்வையும் உங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என நினைத்தால், கேக் ஐ லைனர் உபயோகிக்கலாம். மேக்கப் கலைஞர்களின் சாய்ஸ் இந்த கேக் ஐ லைனர்தான். நடிகை அல்லது மாடல் மாதிரியான தோற்றம் வேண்டினால் கண்களை மூடிக் கொண்டு கேக் ஐ லைனரை தேர்வு செய்யுங்கள்.

மஸ்காரா

முதலில் உங்களுடைய இமைகளின் தோற்றம் எப்படியிருக்கிறது எனப் பார்க்க வேண்டும். மெலிதான, அடர்த்தியே இல்லாத இமைகளா, அடர்த்தியான கருகருவென்ற இமைகளா அல்லது இரண்டுக்கும் இடைப்பட்டவையா எனப் பார்த்தே மஸ்காரா தேர்வு செய்யப்பட வேண்டும்.மெல்லிய அடர்த்தியற்ற இமைகளுக்கு பட்டையான நுனிகள் கொண்ட பிரஷ் வைத்த வால்யூமைசிங் மஸ்காரா சிறந்தது.அடர்த்தியான இமைகள் இருந்தால் மெல்லிய நுனிகளுடனான பிரஷ் கொண்ட மஸ்காரா போதும்.இரண்டுக்கும் இடைப்பட்ட இமைகளுக்கு எந்த மாதிரியான மஸ்காராவும் பொருந்திப் போகும்.மஸ்காரா உபயோகிக்கிறவர்கள், இரவு படுக்கும் முன் அதை ஐ மேக்கப் ரிமூவர் கொண்டு அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

இவை தவிர 3 வாரங்கள் வரை அழியாமல் இருக்கும் இமைகள்கூட இப்போது பிரபலமாகி வருகின்றன. அழகுக் கலை நிபுணரின் ஆலோசனையின் பேரில் அதை உபயோகிக்கலாம்.

பொதுவான ஐ மேக்கப் டிப்ஸ்…

புருவங்களில் ரோமங்கள் இல்லாதவர்கள், அதை மறைப்பதற்காக ஐ ப்ரோ பென்சில் கொண்டு பட்டையாகத் தீட்டிக் கொள்வார்கள். இது செயற்கையான தோற்றத்தைக் கொடுக்கும். அதைத் தவிர்த்து, புருவங்களின் நிறத்தைவிட சற்றே லைட் ஷேடு பென்சில் கொண்டு, புருவங்கள் வளர்ந்துள்ள திசையிலேயே புருவ முடிகளைப் போல லேசாக வரைந்து விட்டால் இயற்கையாகத் தெரியும்.

கருப்பு நிற ஐ லைனருக்கு பதில் பிரவுன் ஷேடு ஐ லைனரை உபயோகிப்பது உங்கள் கண்களை இன்னும் அழகாகக் காட்டும். கண்களின் வடிவத்தை எடுப்பாகவும் அதே நேரம் கண்களில் ஒரு மென்மையையும் காட்டும்.

கண்களுக்கு மேக்கப் செய்யும் போது, இமைகளை ஐ லேஷ் கர்லர் கொண்டு சுருட்டிவிடத் தவறாதீர்கள். இரவு தூங்கச் செல்வதற்கு முன் கண்களில் எந்த மேக்கப்பும் இருக்கக் கூடாது. அதே போல நீண்ட நேரம் கண்களில் ஐ ஷேடோவும் மஸ்காராவும் போட்டுக் கொண்டிருப்பதையும் தவிர்க்கவும்.

கண்களுக்கு மேக்கப் செய்கிற போது கருவளையங்களை கன்சீலர் கொண்டு மறைக்க வேண்டியது அவசியம். அதை மறைக்காமல் செய்கிற ஐ மேக்கப் உங்களை வயது முதிர்ந்தவராகக் காட்டும். ஐ மேக்கப் என்பது பகல், இரவு, வயது என பல விஷயங்களைப் பொறுத்தது. உதாரணத்துக்கு இரவு நேரத்தில் கொஞ்சம் அதிகமான ஐ மேக்கப் அசிங்கமாகத் தெரியாது. ஆனால், பகல் நேரங்களில் மிதமாகவே செய்ய வேண்டும்.

அதே போல 20 வயதுக்கான கலர்கள் மற்றும் ஷேடுகள் 30 வயதினருக்கும், 30 வயதுக்கானவை 40 வயதுக்காரர்களுக்கும் பொருந்தாது. அவரவர் வயது மற்றும் சருமத்தின் தன்மை அறிந்தே ஐ மேக்கப் செய்யப்பட வேண்டும்.

ld3647

Related posts

கருவளையம் மறைய

nathan

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க

nathan

கண்கள் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்க சில டிப்ஸ்….

nathan

அழகிய கண்களை பெறுவது எப்படி ?

nathan

கண்ணைச் சுற்றிக் கருவளையம்

nathan

வசீகரிக்கும் கண்களுக்கு

nathan

கருவளையமா…கவலை வேண்டாம் !

nathan

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan

அழகான கண் இமைகள் வேண்டுமா? இதை படியுங்கள்

nathan